இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

1. செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, “பாட்ஷா படம் வெளியானபோதே ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால் ஆட்சியைப் பிடித்திருப்பார். தற்போது நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வந்தால் அவர் முன்னோடியாக விளங்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

2. சபரிமலைக்கு செல்ல முயன்ற 2 பெண்களை நேற்று நிலக்கல்லில் வைத்து போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3. ஒடிசா செஞ்சூரியன் பல்கலைக்கழகம் சார்பில் நடிகரும், மநீம கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார்.

4. கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழக அணியில் இருந்து முரளி விஜய் விலகியுள்ளார்.

5. உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் மட்டும் கட்டணமின்றி இலவசமாக பார்க்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

6. சர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள், அதை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

7. மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

8. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சுவாதி என்ற நர்சிங் மாணவி தனது காதலனுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

9. டெல்லியில் உள்ள வீடுகளுக்கு இலவச கழிவுநீர் குழாய் இணைப்புகளை வழங்குவதற்காக ‘முதல் மந்திரி கழிவுநீர் குழாய் இணைப்பு திட்டம்’ மாநில அரசால் தொடங்கப்பட்டுள்ளது.

10. சகவீரரை தாக்கிய பங்களாதேஷ் பந்து வீச்சாளர் ஷகாதத் ஹுசைன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

11. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு இடையே நடந்து வரும் பிரச்சனையைத் தீர்க்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு.

12. சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயமடைந்துள்ளனர்.

13. அமெரிக்காவின் ஓக்லஹாமா மாகாணத்தில் உள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்