இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

1. மநீம கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப் பயணத்தை சிறப்பிக்கும் விதமாக நடைபெற்ற ‘உங்கள் நான்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், “இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக முதலமைச்சர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். ஆனால் அற்புதம் நடந்தது. இன்றும் அற்புதம் நடக்கிறது. நாளையும் நடக்கும்” என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

2. ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை வழக்கு தொடர்பாக பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த், ஹேமச்சந்திரன் ஆகியோர் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

3. இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெகுவேகமாக இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டனாகி வருகிறார் விராட் கோலி” எனக் கோலியைப் புகழ்ந்துள்ளார்.

4. கோவையில் அதிமுக கொடிகம்பம் விழுந்து விபத்துக்குள்ளான பெண்ணிற்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

5. நாட்டிலேயே முதல்முறையாக பள்ளிகளில் விர்ச்சுவல் வகுப்பறைகளைத் தொடங்கும் திட்டத்துக்கு உத்தரகாண்ட் முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத் அடிக்கல் நாட்டியுள்ளார்.

6. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, 47வது தலைமை நீதிபதியாக தேர்வுசெய்யப்பட்டுள்ள எஸ்.ஏ.பாப்டேவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பதவிப் பிரமாணம் செய்துவைத்துள்ளார்.

7. தமிழகத்தில் தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

8. தொடர்ந்து நிதி நெருக்கடியில் சிக்கிவரும் ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய 2 பொதுத்துறை நிறுவனங்களும் நடப்பு நிதியாண்டிலேயே விற்பனை செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

9. கோபத்தில் எதிரணி வீரரைத் திட்டிய ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டிசனுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

10. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை டிசம்பர் 13ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டுமென மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11. பாகிஸ்தானில் சுமார் 49,000 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

12. உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி ஆர்.பானுமதி நியமிக்கப்பட்டுள்ளார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் கொலீஜியத்தில் பெண் நீதிபதி ஒருவர் இடம்பெற்றுள்ளார்.

13. மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நூற்றாண்டு பழமைவாய்ந்த தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்