இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

1. சென்னையில் கோலம் போட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் பாகிஸ்தான் அமைப்பில் தொடர்பில் இருப்பதால், அது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்து இருக்கிறார்.

2. சிங்கப்பூரில் தடையை மீறி பட்டாசுகளை வெடித்த தமிழருக்கு 15 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

3. ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் விக்டோரியா கடற்கரையில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

4. சென்னையில் நேற்று 3742 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம், இன்று 7 ரூபாய் விலை குறைந்து 3735 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று 29936 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், இன்று 56 ரூபாய் குறைந்து 29880 ரூபாய்க்கு விற்பனையானது.

5. டெஸ்ட் போட்டியின் நாட்களை நான்காக குறைக்கும் ஐசிசி முடிவுக்கு இங்கிலாந்து ஆதரவு தெரிவித்துள்ளது.

6. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாயாக 1 லட்சத்து 3 ஆயிரத்து 184 கோடி ரூபாய் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் பெய்த திடீர் கனமழை மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

8. ரயில்களில் பயணம் செய்யும் பெண்கள், பாதுகாப்பிற்கு காவலன் செயலியை பயன்படுத்தும்படி தமிழக இருப்புப்பாதை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

9. மகப்பேறு கால சிகிச்சை குறித்து கர்ப்பிணி பெண்கள் அறிந்து கொள்ள மெடர்னிட்டி டாஷ் போர்டு (maternity dash board) எனும் புதிய செயலியை சுகாதாரத் துறை விரைவில் வெளியிடவுள்ளது.

10. புத்தாண்டு தினமான இன்று, உலகிலேயே இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் (67 ஆயிரம்) பிறக்கவுள்ளதாக யுனிசெப் அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

11. நெட் தேர்வில் 60 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

12. புதிய முதலீட்டாளர்களை கண்டுபிடித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு உயிரூட்ட வங்கிகள் முயற்சித்து வரும் நிலையில், இந்துஜா குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்