இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

1. நிர்பயா குற்றவாளிகளை வருகின்ற மார்ச் 3-ம் தேதி அதிகாலை 6 மணிக்கு தூக்கிலிடுமாறு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

2. ஆயுட்காலம் முடிந்தும் தொடர்ந்து இயங்கி வரும் நெய்வேலி என்.எல்.சி முதலாவது அனல்மின் நிலையத்தை வருகின்ற 2022-க்குள் படிப்படியாக மூட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

3. உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 10 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை ஏர்டெல் செலுத்தியுள்ளது.

4. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் இனி நீட் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை; தனியாக நடத்தப்பட்டு வந்த நுழைவுத்தேர்வு இனி இல்லை என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

5. ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள பயணிகளுக்கு 2 ஆயிரம் ஐபோன்களை ஜப்பான் அரசு இலவசமாக வழங்கியுள்ளது.

6. சேலத்திலிருந்து சென்னைக்கு, மாலை நேரத்திலும் விமான சேவையை தொடர, இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக, சேலம் எம்பி பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

7. கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் அடைந்த தோல்வியினால் தனது ஒரு நாள் கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருந்தார் டூபிளசிஸ். இந்நிலையில் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

8. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இப்போட்டிக்கான 13 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

9. இணையத்தில் வைரல் ஆகிவரும், உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஸ்கல் பிரேக்கர் என்ற சேலஞ்சை யாரும் மேற்கொள்ளவேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

10. தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவுவுற்றதையொட்டி அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் சென்று முதல்வர் பழனிச்சாமிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்