இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

1. ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு. கிலோ மீட்டருக்கு ஒரு காசு வீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. புறநகர் ரயில்களில் கட்டண உயர்வு இல்லை. எக்ஸ்பிரஸ் ரயில்களில் கிலோமீட்டருக்கு 2 காசு வீதமும், ஏசி வசதி பெட்டிகளில் கிலோமீட்டருக்கு 4 காசு வீதமும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

2. ஜனவரி 2-ம் தேதி திட்டமிட்டபடி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

3. நிதி ஆயோக் வெளியிட்டுள்ள மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்த பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

4. ஆங்கில புத்தாண்டையொட்டி இன்றும், நாளையும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

5. தமிழகத்தில் அடுத்து நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

6. உலகின் முதல்நாடாக நியூசிலாந்து நாட்டில் 2020 புத்தாண்டு தொடங்கியுள்ளது. இதையொட்டி நடைபெற்ற வாண வேடிக்கை நிகழ்ச்சி, கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.

7. இந்தியாவில், 5ஜி சேவையை வழங்குவதில், உறுதிப்பாட்டுடன் இருப்பதாக சீனாவின் ஹூவாவெய் (Huawei) நிறுவனம், திட்டவட்டமாக கூறியிருக்கிறது.

8. இதுவரை ஒரு கோடியே 15 லட்சத்திற்கும் அதிகமான பாஸ்டேக் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

9. தொடர் விடுமுறை நாட்களை ஈடுகட்ட சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை செயல்படவைக்க, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

10. டீன் ஏஜ் பெண்களுக்கான சர்வதேச அழகி போட்டியில் (Miss Teen International) இந்தியாவை சேர்ந்த ஆயுஷி தோலாகியா மகுடம் சூடினார்.

11. புத்தாண்டு கொண்டாட்டத்தில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்