இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

1. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.31,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2. நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா சுவரில் மோதி காயம் ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்ததாக  சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

3. திருப்பூரில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

4. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.  74.68 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.27 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

5. சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேரணி சென்ற 20,000 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு.

6. அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ சீனிவாசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

7. ஏர்டெல், வோடபோன் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

8. பாகிஸ்தான் ராணுவம், ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை, மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத முகாம்கள் மீது பலூசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் அதன் தோழமை படைகளின்  கிளர்ச்சியாளர்கள் நடத்திய பயங்கர தாக்குதலில் 16 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.

9. அமெரிக்க அதிபர் டிரம்ப் 24-ம் தேதி இந்தியா வர உள்ள நிலையில், டெல்லியில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

10. பாலியல் புகார் வழக்கில் சிக்கிய நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய கர்நாடகாவின் ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்