வாவ்… செம்ம தகவல்- ஹல்வா, குலோப்ஜாமூனுக்கு எல்லாம் இதுதான் தமிழ் பெயராம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாம் அதிகமாக சாப்பிடும் ஹல்வா உள்ளிட்ட பல இனிப்பு உணவுப் பொருட்களின் தமிழ் பெயர்கள் பற்றிய ஒரு பார்வை.

Advertising
>
Advertising

ஒரு பக்கம் ரஷ்யா-உக்ரைன் போர் நடந்திட்டு இருக்கு.. சத்தமில்லாமல் பெரிய சம்பவத்தை செஞ்ச வட கொரியா.. உலக நாடுகள் அதிர்ச்சி..!

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் பல பொருட்களின் தமிழ் பெயர்கள் நமக்கு தெரியவதில்லை. அப்படி நமக்கு தெரியாத சில இனிப்பு வகை உணவுப்பொருட்களின் தமிழ் பெயர்களை பற்றிய கவிஞர் மகுடேஸ்வனரனின் பதிவு வைரலாகி வருகிறது.

ஹல்வா – இன்களி

இந்தியாவில் அதிகமாக உண்ணப்படும் இனிப்பு வகைகளுள் ஒன்றான அல்வா. பெர்சியா (தற்போதைய ஈரான்) நாட்டில் உருவான ஒரு இனிப்பு வகையாகும். பாலில் பேரிச்சம் பழங்களை கலந்து உருவாக்கும் உணவுப் பொருளை ஹல்வா என்று அழைத்து வந்துள்ளனர். ஹல்வா என்ற பெயர் 7 ஆம் நூற்றாண்டிலேயே பயன்பாட்டில் இருந்ததாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் இப்போது அதிகமாக பயன்படுத்தப்படும் ஹல்வாவை தமிழில் ’இன்களி’ என்ற பெயரில் அழைக்கலாம்.

குலோப் ஜாமூன் – தேங்கோளி

ஹல்வாவைப் போலவே இந்த பதார்த்தமும் ஈரானில் இருந்தே தோன்றி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. முகலாய மன்னர் ஷாஜகானின் சமையல் கலைஞர் இதை உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. குலோப் என்ற வார்த்தை பெர்ஷிய மொழியில் இருந்து பெறப்பட்டதாகும். பல விதங்களில் இன்று குலோப் ஜாமூன் செய்யப்பட்டு வருகிறது. இந்த குலோப் ஜாமூனை தமிழில் தேங்கோளி என்று அழைக்கலாம் என சொல்லப்படுகிறது.

லட்டு – இன்னுருண்டை

லட்டு என்று சொல்லப்படும் இந்த வகை இனிப்பு இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு உணவுப் பொருள். ராஜஸ்தானில் இந்த உணவுப்பொருள் முதலில் உருவானதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் பல விதமாக செய்யப்பட்டு வரும் லட்டு இந்தியர்களுக்கு பிடித்த இனிப்பு வகைகளில் ஒன்றாக உள்ளது. லட்டுக்கு தமிழில் இன்னுருண்டை என்று பெயராம். அதே போல லட்டுவில் பயன்படுத்தப்படும் பூந்திக்கு தமிழில் பொடிக்கோளி என்றும் காரம் கலந்து உருவாக்கப்படும் பூந்திக்கு காரப் பொடிக்கோளி என்றும் அழைக்கலாம்.

ஜிலேபி – தேன்குழல்

ஜிலேபி என்றும் ஜாங்கிரி என்றும் அழைக்கப்படும் இந்த உணவின் திட்டவட்டமான பிறப்பிடம் தெரியவில்லை. ஆனால் மத்திய ஆசியாவில் இந்த இனிப்பு முதன் முதலில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதன் தமிழ் பெயர் ’தேன்குழல்’

ரசகுல்லா -சுவைக்கோளி

ரசகுல்லா இந்தியாவில் பிறந்த ஒரு இனிப்பு வகை. ஒரிசாவுக்கு அருகில் உள்ள பூரி எனும் பகுதி மக்கள் இதை முதன் முதலில் உருவாக்கியுள்ளனர். வட இந்தியாவில் குறிப்பாக மேற்கு வங்கத்தில் இந்த ரசகுல்லா அதிகம் உண்ணப்படும் ஒரு இனிப்பு வகையாக உள்ளது. தமிழில் ரசகுல்லாவுக்கு ‘சுவைக்கோளி’ என்று பெயராம்.

மைசூர் பாக் – கண்டப்பாகு

தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள கர்நாடக மாநிலத்தின் மைசூர் பகுதியில் உருவான இனிப்புப் பண்டம். தமிழகத்திலும் வெகு பிரபலமான ஒன்று. இதற்கு தமிழில் கண்டப்பாகு என்று பெயர். இதுபோல பஜ்ஜி எனப்படும் காரவகைக்கு தோய்ச்சி என்று பெயர்.

யார் நீ? என்ன பண்ணிட்டு இருக்க?.. கத்தியபடி Live-ல இருந்து எந்திரிச்சு போன ஹர்ஷா போக்லே.. பரபரப்பான ரசிகர்கள்..!

TAMIL NAMES SWEET ITEMS, HALWA, GULAB JAMUN, ஹல்வா, குலோப் ஜாமூன், லட்டு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்