இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

1. டெங்கு எதிரொலி: அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

2. சிறப்புக் காட்சிக்கு அனுமதி மறுப்பு என்பது விஜய் நடித்துள்ள படம் என்பதற்காக அல்ல ;அதிக கட்டண வசூலை தடுப்பதற்காகவே சிறப்புக் காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

3. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள எருமார்பட்டியில் ஷேர் ஆட்டோ-லாரி நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.

4. நல்ல தருணங்கள் மட்டுமே என தலைப்பு கொடுத்து டோனியுடன் இருக்கும் புகைப்படங்களை ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ளார்.

5. அமமுக என்பது கட்சியே கிடையாது; இந்த கட்சியில் அம்மா பெயரை பயன்படுத்த தார்மீக உரிமையும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

6. மருத்துவர்களின் சேவை மக்களுக்கு தேவை. அரசு மருத்துவர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

7. ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது.

8. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி. போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் அறிவிப்பு.

9. பிகில் திரைப்பட முதல் காட்சியை ஒளிபரப்ப கூறி ரகளையில் ஈடுபட்ட 30 விஜய் ரசிகர்கள் கிருஷ்ணகிரியில் கைது.

10. திருச்சி அருகே மணப்பாறையில் 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது. ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி தீவிரம்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்