இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

1. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2196 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

2. தற்போதைய நிலவரப்படி திமுக 14 மாவட்டங்களிலும், அதிமுக 12 மாவட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

3. ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்ட ஊழியர்களில் சிலருக்கு முறையாக உணவு, குடிநீர் வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. இதனால், ஒருசில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றதால், வாக்கு எண்ணிக்கை தாமதமானது.

4. பிரதமர் நரேந்திர மோடியின் அன்பும் அரவணைப்பும் ஆறுதலும் மகத்தானது என, இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி அளித்துள்ளார்.

5. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 456 ரூபாய் உயர்ந்து ரூ. 30,344க்கு விற்பனை செய்யப்படுகிறது.

6. 1 ரன் அடிக்க 38 பந்துகள் எடுத்து கொண்டதால் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

7. பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மணிவேல், தேர்தலில் வென்று வெற்றிச் சான்றிதழை பெற்றுச் சென்ற நிலையில் உயிரிழந்தார்.

8. ஹெலிகாப்டர் இறங்குவதில் சிக்கல் இருப்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் சபரிமலைப் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

9. கன்னியாகுமரி மாவட்டத்தின் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11வது வார்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுனில் வெற்றி பெற்றார்.

10. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2001-ம் ஆண்டு ஹர்பஜனின் பந்துவீச்சை பார்த்து திகைத்துப்போனேன் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்