கேரளாவில் நடந்த ‘தமிழ்பெண்’ கல்யாணம்.. இப்போ ‘வைரல்’ டாபிக்கே இதுதான்.. அப்படி என்ன ஸ்பெஷல்..?
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் சமீபத்தில் தமிழ் பெண்ணுக்கு நடந்த திருமணம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள திருப்ரயா நகரை சேர்ந்தவர் ரசாக். விமானப்படையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற இவர், கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருப்ரயா சாலையில் அழுக்கு நிறைந்த ஆடைகளுடன் கவிதா என்ற 8 வயது சிறுமி அழுதுகொண்டிருந்ததைப் பார்த்துள்ளார். உடனே சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ரசாக்கிற்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 4-வது மகளாக கவிதாவையும் அவரது மனைவி நூர்ஜகான் வளர்க்கத் தொடங்கினார்.
இந்த நிலையில் கவிதாவின் பெற்றோர் சேலத்தில் இருப்பதை ரசாக் கண்டுபிடித்துள்ளார். இதனை அடுத்து மகளைப் பார்க்க சேலத்தில் இருந்து கேரளாவுக்கு சென்றுள்ளனர். பெற்ற தாய், தந்தை வந்த மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், இத்தனை வருடங்களாக வளர்த்த பெற்றோரை பிரிவதற்கு கவிதாவுக்கு மனமில்லை. இதனால் கேரள வளர்ப்பு பெற்றோருடனே கவிதா தங்கியுள்ளார். ஆனாலும் தன்னுடைய பெற்றோரை பார்க்க அடிக்கடி சேலத்துக்கு செல்வதும், அவர்கள் கவிதாவைப் பார்க்க கேரளாவுக்கு வருவதுமாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் திருமண வயதை எட்டிய கவிதாவுக்கு ரசாக் வரன் பார்க்க ஆரம்பித்தார். இதனை அடுத்து நட்டிகா பகுதியை சேர்ந்த போட்டோகிராபர் ஸ்ரீஜித்தை தன் மகள் கவுதாவுக்கு ரசாக் நிச்சயம் செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 6ம் தேதி கவிதா-ஸ்ரீஜித்துக்கு இந்து முறைப்படி வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு தனது வீட்டின் அருகே உள்ள 4 சென்ட் நிலத்தை திருமணப் பரிசாக மகள் கவிதாவுக்கு ரசாக் எழுதி வைத்தார். மேலும் ரசாக் மகள்கள் 12 பவுன் தங்க நகைகளை தங்களது சகோதரி கவிதாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தனர். மதம், மொழி கடந்து நடந்த இந்த திருமணம் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திருமணம் நடந்து 10 நாட்களை கடந்தாலும் மணமக்களின் போட்டோவை இணையத்தில் தொடர்ந்து பதிவிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News Credits: Mathrubhumi
மற்ற செய்திகள்
'வாகன ஓட்டிகளே கவனம்'... 'சென்னையில் அறிமுகமாகும் 'ஜீரோ வயலேஷன் ஜங்ஷன்'... சென்னை காவல்துறை அதிரடி!
தொடர்புடைய செய்திகள்
- 'உன்மேல வச்ச நம்பிக்கைய செதச்சுட்டல...' 'அப்போ என்கிட்ட சொன்னதெல்லாம் பொய்...' - லிவிங்_டூகெதரோட டிமிக்கி கொடுக்க நெனச்ச காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி...!
- 2000 அடி உயரத்தில் நடந்த பட ‘சூட்டிங்’.. கை தவறி விழுந்த ‘ஐபோன்’.. தேடிப் பார்த்தபோது காத்திருந்த ஆச்சரியம்..!
- “இதனால தான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன்!”.. 2 வருஷமா பாறைக்கு அடியில் வாழ்ந்து வரும் 35 வயதான ‘அதிசய’ வாலிபர்!
- Video: 'ஒரு பக்கம் பிடித்து இழுத்து வெளியேற்றம்'.. 'இன்னொரு பக்கம் அமரவைக்க முயற்சி!'.. துணை சபாநாயகருக்கு நடந்தது என்ன?.. ‘அமளி துமளி’ சம்பவம்!.. பரவும் வீடியோ!
- ‘கைப்புள்ள பேசாம தூங்குடா.. தூங்கு!’.. 'மாஸ்க்க முகத்துக்கு மாட்டாம'.. கண்ணுக்கு மாட்டிக்கொண்ட நபர்.. இதுக்கு பின்னாடி தான் இருக்கு ‘அந்த சோகக் கதை!’
- 'தடல்' புடலா நடந்த 'கல்யாண' ஏற்பாடு!!... மணமகனின் 'நண்பர்களால்' வந்த 'பிரச்சனை'... திருமணத்தை நிறுத்திய 'மருமகள்'... பரபரப்பு 'சம்பவம்'!!!
- "உன் கனவு நனவாயிடுச்சு.. அத பாக்க தான் நீ இல்ல".. வெள்ளித்திரையில் நாயகியாக கால் பதித்த சித்ரா!.. 'கனத்த இதயத்துடன்' சக நடிகை பகிர்ந்த 'FIRST LOOK' போஸ்டர்!
- ஒரே மேடையில்... ஒரே முகூர்த்தத்தில்... அம்மாவுக்கும், மகளுக்கும் திருமணம்!.. குடும்பத்தினர் எடுத்த அதிரடி முடிவு!
- தொழிலதிபர் தொலைத்துவிட்ட, ‘ரூ. 2.5 கோடி மதிப்பிலான ஓவியம்!’.. ஆபரேஷனில் இறங்கிய மருமகன்.. கடைசியில் இருந்த இடம் தெரியுமா?
- ‘காதலருக்கு வந்த நோட்டிபிகேஷன்!’.. 'கேமராவில் சிக்கிய வீடியோவால்'.. பெண்ணுக்கு நடந்த மரண பங்கம்! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!