'அடிச்சது அப்பா.. கெரோசின் ஊத்துனது அத்தை.. அப்றம் எரிச்சது'.. 5 வயது பிஞ்சு மகளின் கண்முன்னே பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தின் உச்சம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப் பிரதேச மாநிலம், ஸரஸ்வதி மாவட்டத்தில் உள்ளது காத்ரா கிராமம். இங்குள்ள நது வீட்டில் தனது மனைவி சாயிஷா மற்றும் 5வயது மகள் பாத்திமாவை, தன் குடும்பத்தாரிடம் விட்டுவிட்டு, மும்பையில் பணிபுரிந்துவந்த நபீஸ் எனும் 26 வயது இளைஞர், கடந்த சில நாட்களுக்கு முன் போனிலேயே சாயிஷாவுக்கு முத்தலாக் கொடுத்தார்.
இதனையடுத்து அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் சாயிஷா, தனது கணவர் நபீஸ் மீது புகார் அளித்தார். ஆனால் போலீஸார் இந்த புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அதற்கு மாறாக, நபீஸிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும், அவர் முமபையில் இருந்து வீடு திரும்பினால், அழைத்துவரச் சொல்லியும் போலீஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், நபீஸ் ஊருக்கு வந்தபோது தன் மனைவி சாயிஷாவிடம் முதல் வேலையாக, முத்தலாக் சொன்ன பிறகு, எதற்கு என் வீட்டில் தங்கி இருக்கிறாய்? வீட்டுக்கு போ என்று கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், வீட்டில் இருந்த நபீஸின் தந்தை அசீஸூல்லா, அம்மா ஹசீனா, நபீஸின் சகோதரிகளான நாதிரா, குடியா ஆகியோர் கூடியுள்ளனர்.
அப்போது நபீஸ் சாயிஷாவின் தலைமுடியைப் பிடித்து அடிக்க, சாயிஷாவின் மீது நாதிரா கெரோசின் ஊற்ற, அசீஸூல்லாவும் , ஹசீனாவும் தீக்குச்சியை உரசி பற்றவைத்து உயிரோடு எரித்தனர். முழுதாக எரிந்து முடிந்த பின்பு அவர்கள் நகர்ந்திருக்கின்றனர். ஆனால் சாயிஷாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
போலீஸார் வந்து விசாரிக்கும்போது, தன் கண் முன்னே நடந்த கோரமான சம்பவத்தை நபீஸ்-சாயிஷாவின் 5 வயது மகள் பாத்திமா அப்படியே விவரித்துள்ளார். இதனையடுத்து அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் குற்றவாளிகளுக்கு முறையான தண்டனை வழங்கப்பட வேண்டும், என்பதால், நீதிமன்றத்தை நாடவுள்ளதாக சாயிஷாவின் சகோதரர் ரபீக் கூறியுள்ளார்.
படம்: சித்தரிப்புப் படம்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இப்படியா வருவீங்க?'.. 'பணியில் இருந்த டிராஃபிக் காவலருக்கு'.. நள்ளிரவில் நேர்ந்த பதைபதைப்பு சம்பவம்!
- 'இதுக்குத்தான் அக்காவ அழச்சுட்டு போனீங்களா மாமா?'.. கதறும் சகோதரர்.. போலீஸ் கணவரால் சோகம்!
- 'தப்பிக்கும்போது இப்படி ஆயிடுச்சு..'.. 'மகேஷ்க்கு ஸ்கெட்ச் போட்டதுக்கு 2 காரணம்'!
- 'டிக்டாக் வீடியோவுல கள்ளக்காதலனோட கொஞ்சினா.. 'அதான் ஆத்திரத்தில் இப்படி செஞ்சேன்'!
- 'மனைவிய காணோம் சார்.. எங்க போனானே தெரியல'.. சகோதரருடன் சேர்ந்து கணவரின் நடுங்கவைக்கும் சம்பவம்!
- ‘சென்னையில் காவலரின் பகீர் முடிவால்’... 'மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்’... ‘பரிதவிக்கும் 7 வயது குழந்தை’!
- ‘மனைவிய என்கூட அனுப்ப மாட்டீங்களா?’... ‘ஆத்திரத்தில் மாமியாரை அறைந்த மருமகன்’... ‘மாமனாரின் வெறிச்செயல்’!
- ‘ஆர்டர் பண்ணி எவ்ளோ நேரமாச்சு’... 'கடும் பசியில், கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த'... 'உறைய வைக்கும் சம்பவம்'!
- 'உங்க மகள் தற்கொலை செஞ்சுகிட்டா!.'.. 'நிச்சயமான பெண்ணை அழைத்துச் சென்ற போலீஸ்'.. நாகையில் சோகம்!
- 'இப்ப என் ஒயிஃப் வருவா'.. 'விட்றாதீங்க.. அப்றம் ஃபிளைட் செதறிடும்'.. பரபரப்பை ஏற்படுத்திய போன் கால்!