கேதர்நாத் விமான விபத்தில் பலியான பைலட்.. விபத்துக்கு முன் கடைசியாக மனைவிக்கு போன் செஞ்சு சொன்ன உருக்கமான விஷயம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாகேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான விமானி, இறுதியாக தனது மனைவிக்கு போன் செய்து பேசியுள்ளார்.
Also Read | GP Muthu: "நாளைக்கு என்ன நடக்குதுன்னு பாருங்க".. GP முத்துவின் பேச்சை கேட்டு கலகலத்துப்போன போட்டியாளர்கள்..!
உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் குகைக்கோவில் உலக அளவில் பிரசித்திபெற்றது. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு கேதார்நாத் யாத்திரைக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பக்தர்களின் வசதிக்காக ஹெலிகாப்டர் வசதியும் இங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே நேற்று 6 பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று கேதார்நாத் கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கருட் சட்டி என்ற இடத்தில் விபத்தை சந்தித்தது. மோசமான வானிலை காரணமாக அருகில் இருந்த மலையில் மோதியிருக்கிறது இந்த ஹெலிகாப்டர். இதில் பயணித்த விமானி உட்பட 7 பேரும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இந்த ஹெலிகாப்டரை ஒட்டிச் சென்ற விமானி, விபத்துக்கு முன்பு தனது மனைவிக்கு போன் பேசியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதாவது விபத்திற்கு நடந்த தினத்திற்கு முந்தைய நாளான திங்கட்கிழமை தனது மனைவிக்கு போன் செய்திருக்கிறார் விமானி அனில் சிங். அப்போது,"மகளை பார்த்துக்கொள். அவளுக்கு உடல்நிலை சரியில்லை" என மனைவியிடம் கூறியிருக்கிறார்.
57 வயதான அனில் சிங் தனது மனைவி ஷிரீன் ஆனந்திதா மற்றும் மகள் ஃபிரோசா சிங் ஆகியோருடன் அந்தேரி பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள அவரது மனைவி ஷிரீன் ஆனந்திதா,"நாங்கள் எனது கணவரின் இறுதிச் சடங்குகளை செய்ய டெல்லிக்கு செல்ல இருக்கிறோம். எங்களுக்கு கடந்த திங்கட்கிழமை அவர் போன் செய்தார். அப்போது மகளை பார்த்துக்கொள்ளும்படியும் அவளுக்கு உடல்நிலை சரியில்லை எனவும் அவர் கூறினார். அடுத்தநாள் இந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது" என கவலையுடன் தெரிவித்திருக்கிறார்.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிகத்தை சேர்ந்த 3 பேரும் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உடல்களை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருக்கிறார்.
Also Read | 26 வயசுல மினிஸ்டர் பதவி.. உலகமே இவங்கள பத்திதான் பேசிட்டு இருக்கு.. யாருப்பா இவங்க..?
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "என் அப்பாவுக்கு வேலை கெடச்சுருச்சு".. துள்ளிக் குதித்து கொண்டாடிய மகள்.. இணையத்தில் பரவும் நெகிழ்ச்சி வீடியோ!!
- கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்.. 12,000 அடி உயரத்தில் நடந்த பரபரப்பு.. கண்ணீர்விட்ட விமான பணிப்பெண்.. கடைசியில் நெகிழ்ச்சி வீடியோ..!
- புதுசா வாங்குன பைக்-கு மாலையை போடுங்க.. டக்குன்னு கணவர் செஞ்ச காரியம்.. எல்லோரும் சிரிச்சிட்டாங்க.. Cute வீடியோ..!
- 400 பேருடன் பயணித்த விமானம்.. நைட்ல அதிகாரிகளுக்கு வந்த ஒரு ஈமெயில்.. கொஞ்ச நேரத்துல மொத்த ஏர்போர்ட்டையும் பிளாக் பண்ணிட்டாங்க..!
- பி. காம் படிப்பு.. முன்னணி நிறுவனத்தில் வேலை.. எல்லாத்தையும் விட்டுட்டு இளைஞர் எடுத்த ரூட்.. அவங்க மனைவி குடுத்த ஐடியா தான் காரணமாம்!
- "மக UPSC-க்கு படிக்குறா, நானும் உதவி பண்ணனும்'ல".. ஆட்டோ ஓட்டிக்கிட்டே அப்பா செஞ்சு வரும் காரியம்!!
- வேறு ஒரு ஆணுடன் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்த மனைவி.. நடுராத்திரி கேட்ட அலறல் சத்தம்.. சென்னையில் பரபரப்பு..!
- "என் மகள் கூட Dating போணும்ன்னா".. 5 ரூல்ஸ் போட்ட அம்மா.. "அதுலயும் அந்த 2வது பாய்ண்ட் இருக்கே"!!
- "பணக்காரங்கனா எல்லோரும் அப்படித்தான் இருக்கணுமா?".. தன்னை விட்டு பிரிந்துபோன மகள் குறித்து எலான் மஸ்க் உருக்கம்.. முழு விபரம்..!
- தான் பிறந்த கருவிலேயே குழந்தை பெற்றெடுக்க முடிவெடுத்த பெண்?!.. சாத்தியமா? வியக்க வைக்கும் பின்னணி!