“ஒரே ஒரு ட்வீட் .. உங்கள படபடக்க வெக்குதுனா.. அதுக்கு நீங்க இதான் பண்ணனும்!” - நடிகை ‘டாப்ஸி’யின் அனல் பறக்கும் கருத்து!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

அதன்படி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்து இருந்தனர். மேலும் பாடகி ரிஹானா ட்விட்டரில், “ஏன் இது பற்றி யாருமே பேசவில்லை?” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு இந்திய பிரபலங்கள் பலரும் பதில் அளித்திருந்தனர். அந்த வகையில் கங்கனா ரனாவத், “இந்தியாவில் போராடிக் கொண்டிருப்பவர்கள் விவசாயிகள் அல்ல; அவர்கள் தீவிரவாதிகள் இந்தியாவின் ஒற்றுமை பிளவுபடுத்த நினைப்பவர்கள். உங்களுக்கு ஒன்றும் தெரியாது!” என்றும் அவர் சர்வதேச நிறுவனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தமது வீட்டை பதிவிட்டு இருந்தார்.

இதனைத்தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர், “இந்தியாவின் இறையாண்மை என்பது சமரசம் செய்ய முடியாதது; வெளிப்புறத்தில் இருந்து பார்ப்பவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாம். ஆனால் பங்கேற்பாளர்கள் இல்லை; இந்தியர்களுக்கு இந்தியாவை தெரியும். ஒரே நாடாக ஒற்றுமையுடன் இருக்கட்டும்” என்று கருத்து பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து கூறி கருத்து வேறுபாடுகளின் இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் நம் நாட்டின் கட்டமைப்பு விவசாயிகள்தான் அமைதியை கொண்டுவர அனைத்து தரப்பினருக்கும் இடையில் ஒரு இணக்கமான தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவர்களைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள், நடிகர்கள் என பலரும் இப்படியான கருத்துக்களை கூறி வர, நடிகை டாப்ஸி இன்னும் சர்ச்சைக்குரிய கருத்தினை கூறியிருக்கிறார்.

இந்த ட்வீட் வைரலாக மாறியிருக்கிறது. அதில், “ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையை பிளவுபடுத்தும் என்றால், ஒரு நகைச்சுவை உங்கள் இறை நம்பிக்கையை குலைக்கும் என்றால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை படபடக்க வைக்கிறது என்றால் உங்கள் நம்பிக்கை கட்டமைப்பை நீங்கள்தான் வலிமையாக்க வேண்டும்!.. அதற்கு மாறாக மற்றவர்களுக்கு கொள்கை குறித்து பாடம் எடுக்க வேண்டாம்!” என்று குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ: விவசாயிகள் போராட்டத்தை சர்வதேச கவனத்துக்கு கொண்டு போன பிரபலங்கள்! .. அடுத்த ‘சில மணி நேரத்திலேயே’ விளக்கம் அளித்து வெளியுறவுத்துறை ட்வீட்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்