'போட்டியை' சமாளிக்க.. இந்த ரெண்டு பேரும் 'கைகோக்க' போறாங்களாம்.. எக்கச்சக்க 'ஆபர்' கன்பார்ம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉணவு டெலிவரி செய்வதில் முன்னணி நிறுவனங்களாக திகழும் சொமாட்டோ, ஸ்விக்கி விரைவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கியும், சொமாட்டோவும் தற்போது பல்வேறு முனைகளில் இருந்தும் போட்டிகளை சந்திக்க தொடங்கியுள்ளன. எனவேதான் இரண்டு தரப்பினரும் தங்களுக்குள் இணைவது பற்றி பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளன.
உணவு டெலிவரியை பொறுத்தவரை உபேர் ஈட்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனங்கள் தொடர்ந்து தடுமாறி வருகின்றன. குறிப்பாக வாடிக்கையாளர்களை சேர்ப்பது, உணவகங்களை இணைப்பது, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுக்காக ஏகப்பட்ட பணத்தினை 2 நிறுவனங்களும் செலவழித்து வருகின்றன.6 மாதங்களுக்கு முன்புவரை ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனங்கள் இதற்காக மாதந்தோறும் சுமார் 30 மில்லியன் டாலரை செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது.
எக்கச்சக்க தள்ளுபடிகள், டெலிவரி ஊழியர்களுக்கு சிறந்த ஊதியங்கள் மற்றும் உணவகங்களுக்கு அதிக கமிஷன்கள் வழங்குவது, என உணவு விநியோக வணிகத்தில் அமேசான் மற்றும் ஊபர் ஆகியவை இரட்டிப்பாக அதிரடி காட்ட தொடங்கியுள்ளன. இவற்றை, சொமாட்டோ மற்றும் ஸ்விக்கியால் எதிர்கொள்ள முடியவில்லை. சொமாட்டோ நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தும், செலவுகளை குறைத்தும் லாப பாதையில் திரும்ப முயற்சி செய்து வருகிறது. தற்போது சொமாட்டோ ஒவ்வொரு மாதமும் 19 மில்லியன் டாலர்களை மட்டுமே செலவு செய்து வருகிறது.
இதனால் தான் இரண்டு நிறுவனங்களும் உணவு டெலிவரியில் கைகோர்க்க முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒருவேளை இது நடந்தாலும் இந்தியப் போட்டி ஆணையத்தின் (Competition Commission of India) அனுமதியை பெற பெரும் முயற்சிகளை எடுக்க வேண்டிவரும் என்று கூறப்படுகிறது. ஸ்விக்கி தற்போது பெங்களூரை தலைமையிடமாக் கொண்டும், சொமாட்டோ தற்போது குருகிராமை தலைமையிடமாக் கொண்டும் இயங்கி வருகிறது.
2019 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், சொமாட்டோ ரூ. 1,397 கோடி வருவாய் பெற்றதாகவும் ரூ.1,001 கோடி இழப்பை எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது. ஸ்விக்கி 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் 468 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அதில் 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஸ்விக்கி தனது 2019-ம் ஆண்டிற்கான வருடாந்திர வருவாய் மதிப்பை நிறுவன விவகார அமைச்சகத்திடம் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஒரே பிளானில் இத்தனை ஆஃபரா! ’.. ‘பிரபல நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு’..
- 'முன்னாள் முதல்வரின் பேரனுக்கும் உணவு டெலிவரி பாய்க்கும் கைகலப்பு'! ... ‘சென்னையில் பரபரப்பு’!
- ஒரே நாளில் '49 ஆயிரம்' கோடி அவுட்.. உலகின் 'நம்பர் 1' பணக்காரர்.. அந்தஸ்தை இழந்த 'அமேசான்' ஓனர்!
- ‘ஆன்லைன் விற்பனையில் அடுத்த ப்ளான்’ ‘அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் ப்ளிப்கார்ட்’..!
- 3500 கோடி..ஸ்விக்கி, சொமாட்டோவுக்கு 'போட்டியாக'.. எக்கச்சக்க 'ஆபர்களுடன்' களமிறங்கும்.. 'பிரபல' நிறுவனம்!
- ‘தீபாவளி அதிரடி ஆஃபர்’ அமேசானின் அடுத்த தள்ளுபடி விற்பனை..! விவரம் உள்ளே..!
- ‘இனி ஸ்விக்கி டெலிவரி’.. ‘இங்க எல்லாமும் கிடைக்கும்’.. ‘வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு’..
- ‘எங்க இருக்கும்னு சொன்னா அங்க டெலிவரி பண்ணிடுவாங்க’.. ‘நாய்க்கு தினமும் வரும் ஆன்லைன் உணவு’..
- 'நீங்க' இப்படி செய்றது கொஞ்சம்கூட சரியில்ல?.. ஸ்விக்கிக்கு எதிராக பொங்கும் வாடிக்கையாளர்கள்!
- 'எல்லோரும்' சமம் தான்....எவர்கிரீன் 'ரிப்ளை' கொடுத்த ஸ்விக்கி!