'ஒரே நேரத்துல இத்தனை பேரா?... 'தம்பி, இனிமேல் வேலைக்கு வர வேண்டாம்'... 'அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள்'... நிறுவனம் கொடுத்த ஷாக்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா பாதிப்பு நீண்டு கொண்டே செல்லும் நிலையில், பொருளாதார ரீதியில் பலரது வாழ்க்கையில் விளையாட தொடங்கியுள்ளது. அந்த வகையில் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி வேலை நீக்கம் என்ற கடினமான முடிவை எடுத்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பல தொழில் நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக உணவக தொழிலும் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதையடுத்து பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி தனது ஊழியர்களில் 1100 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து பேசிய, ஸ்விகி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஸ்ரீஹர்ஷா மஜெட்டி, இது மிகவும் கடினமான முடிவு என தெரிவித்துள்ளார்.

''பல இடங்களில் எங்களது 1100 ஊழியர்களை விட்டு பிரிய வேண்டிய கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நகரங்களிலும், தலைமை அலுவலகத்திலும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். நிர்வாகத்தால் பலமுறை கலந்து பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்த கடின முடிவை எடுப்பதை தவிர வேறு வழியில்லை'' என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே வேலையிழப்பால் பாதிக்கப்படும் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தது மூன்று மாதத்திற்கு சம்பளம் வழங்கப்படும் என்று ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்விகியில் வேலை பார்த்த ஊழியர்களின் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஏற்ப, கூடுதலாக ஒரு மாதத்திற்கு தொகை வழங்கப்படும். மேலும் அவர்களின் பணிக்காலத்திற்கு ஏற்ப மூன்று முதல் எட்டு மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படும்.என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தசூழ்நிலையில் ஸ்விகியின் போட்டி நிறுவனமான ஜொமாட்டோ, தனது ஊழியர்களின் 13 விழுக்காட்டினரை நீக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் அந்நிறுவன ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஸ்விகி நிறுவனம் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, அந்நிறுவன ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்