"குதிரை'ல போனது டெலிவரி ஊழியரே இல்லையாமே.." ஸ்விகி நிறுவனம் வெளியிட்ட உண்மை.. அந்த பேக்'ல இருந்தது என்ன தெரியுமா??

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குதிரை மீது ஸ்விகி ஊழியர் ஒருவர் மழையில் பயணம் மேற்கொண்டதாக கடந்த சில தினங்களுக்கு முன் வீடியோ ஒன்று வெளியாகி இருந்த நிலையில், பின்னால் உள்ள உண்மை காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Advertising
>
Advertising

மும்பை நகரில் கடந்த சில தினங்களுக்கு முன் கனமழை பெய்து வந்தது. அப்போது, குதிரை ஒன்றில் ஸ்விகி ஊழியர் பையுடன் சாலையை கடந்து சென்ற வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.

அதே போல, நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை கண்டு, மழை என்பதை கூட பொருட்படுத்தாமல், அர்ப்பணிப்புடன் குதிரை மீது சென்ற ஊழியருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர்.

அவரு ஸ்விகி ஊழியரே இல்லையாம்..

இதனைத் தொடர்ந்து, குதிரையில் சென்ற ஸ்விகி ஊழியரை, கண்ணில் மை போட்டு தேடியது ஸ்விகி நிறுவனம். அது மட்டுமில்லாமல், அந்த ஊழியரைக் கண்டுபிடித்து தரும் நபர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றும் ஸ்விகி நிறுவனம் ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், குதிரையில் சென்ற அந்த இளைஞர் யார் என்பதும், அவர் ஸ்விகி ஊழியர் இல்லை என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

குதிரையில போனது யாரு?

இது தொடர்பான பதிவு ஒன்றையும் ஸ்விகி தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதன் படி, அந்த குதிரையை ஓட்டிச் சென்ற இளைஞரின் பெயர் சுஷாந்த் என்பது தெரிய வந்துள்ளது. அவர் ஸ்விகி ஊழியர் இல்லை என்பதும், மும்பை நகரில் திருமண நிகழ்வுகளில், ஊர்வலமாக செல்லும் குதிரைகளை பரிமாரித்து வரும் பணியாளர் என்றும் ஸ்விகி நிறுவனம், தங்களின் பதிவில் குறிப்பிட்டுள்ளது. தனது நண்பர்களிடம் இருந்து, பொருட்களை வாங்கி விட்டு, பின்னர் மறந்து விடும் பழக்கம் உள்ளவர் சுஷாந்த் என குறிப்பிட்டுள்ள ஸ்விகி, அப்படி தான் அந்த ஸ்விகி பையையும் நண்பரிடம் இருந்து அந்த இளைஞர் வாங்கி சென்றதாக தெரிவித்துள்ளது.

இந்த வீடியோ எடுக்கப்பட்ட சமயத்தில், அந்த ஸ்விகி பைக்குள் உணவுக்கு பதிலாக குதிரைகளை அழகுப்படுத்தி பயன்படுத்தும் எம்பிராய்டரி பொருட்கள் இருந்துள்ளது. ஒரு திருமணம் முடிந்து விட்டு, செல்லும் வழியில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும், அப்போது சிக்னலில் நின்ற அவி என்ற இளைஞர் தான் இந்த வீடியோவை எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

பலரும் ஸ்விகி ஊழியர் என குதிரையில் இளைஞர் செல்லும் வீடியோவை வைரலாக்கி வந்த நிலையில், ஸ்விகி நிறுவனமும் அவரை வலை வீசி தேடியது. ஆனால், கடைசியில் ஆவர் ஸ்விகி ஊழியர் இல்லை என்பதை விளக்கத்துடன் சொன்ன ஸ்விகியின் அறிக்கை, தற்போது அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

SWIGGY, DELIVERY GUY, HORSE, MUMBAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்