'பசி வயிற்றை கிள்ள உணவுக்காக காத்திருந்த பெண்'... 'திடீரென 'ஸ்விகி' அனுப்பிய மெசேஜ்'... 'என்னடா நடக்குது'ன்னு கடுப்பான பெண்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஸ்விகி உணவு டெலிவரி நிறுவனம் மூலம் முதல் முதலாக உணவு பொருளை ஆர்டர் செய்த நிலையில், தலைகீழாக அதில் நடந்த சம்பவம் குறித்து பெண் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்த சயனிகா தாஸ் என்ற பெண், ஸ்விகி செயலி மூலம் உணவொன்றை முதல் முறையாக ஆர்டர் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தனது உணவு பொருளுக்காக காத்திருந்த போது, அவரது மொபைல் எண்ணிற்கு வந்த மெசேஜ் ஒன்று அவரை சற்று அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அதில், 'உங்களுக்கான ஆர்டரை ஊழியர் ஒருவர் எடுத்துக் கொண்டு வந்த நிலையில், அவரிடம் இருந்து உங்களது உணவை யாரோ பறித்துச் சென்றுள்ளனர். நீங்கள் குறிப்பிட்ட உணவை வழங்க முடியாமல் போனதற்கு வருந்துகிறோம். உங்களையும் இது வருத்தமடையச் செய்திருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இந்த ஆர்டரை நாங்களே உங்களுக்காக ரத்து செய்து கொள்கிறோம். வேறு உணவகம் ஒன்றில் இருந்து உங்களது ஆர்டரை செய்து கொள்ளுங்கள்' என குறிப்பிட்டிருந்தது.

தான் செய்த முதல் ஆர்டரே ஊழியர் கொண்டு வந்து கொண்டிருந்த போது, யாரோ அடையாளம் தெரியாத நபரால் பறிக்கப்பட்டதை அறிந்த சயனிகா தாஸ், தனக்கு வந்த மெசேஜ்ஜை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, 'மற்றவர்களால் பறிக்கப்பட்டது. இப்படியான சம்பவங்கள் எல்லாமும் நொய்டாவில் தான் நடக்கிறது' என வேடிக்கையாக குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த பதிவு சில மணி நேரங்களிலேயே அதிகம் வைரலான நிலையில், அதன் பிறகு மேலும் ஒரு கருத்தையும் சயனிகா தாஸ் குறிப்பிட்டுள்ளார். "ஸ்விகி வாடிக்கையாளர் மையத்தில் இருந்து அழைப்பு ஒன்று எனக்கு வந்தது. அதில் பேசிய நபர், 'உங்களது உணவு பொருள் எங்களது ஊழியரிடம் இருந்து பறிக்கப்பட்டது. எங்களது ஊழியரையும் அந்த நபர்கள் அடித்து உதைத்துள்ளனர்' என மறுபுறம் இருந்த நபர் என்னிடம் தெரிவித்தார்' என குறிப்பிட்டுள்ளார்.

 

சயனிகாவின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பல விதமான கமெண்ட்டுகளையும், மீம்ஸ்களையும் பறக்க விட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்