15 'மூலிகைகள்' கொண்டு தயாரிக்கிறோம்... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 'இனிப்பு'கள் அறிமுகம்... விலை எவ்ளோ தெரியுமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவை தடுக்க ஒவ்வொரு நாட்டினரும் பல்வேறு தடுப்பு முறைகளை கையாண்டு வருகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களுக்கு கொரோனா பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகள் மற்றும் மூலிகைகளை எடுத்துக்கொள்ள அரசு அறிவுரை வழங்கி வருகிறது.

Advertising
Advertising

இந்த நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த ஸ்வீட் கடை ஒன்றின் உரிமையாளர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் இனிப்பு வகைகளை அறிமுகம் செய்துள்ளார்.

இதுகுறித்து அக்கடையின் உரிமையாளர் கூறுகையில், ''கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே ஒரே வழியாக கருதப்படுகிறது. மருந்து எதுவும் இதுவரை இல்லாத நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் வகையில், 15 வெவ்வேறு மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகளை கலந்து இந்த இனிப்பு வகைகளை தயாரித்துள்ளோம். ஒவ்வொரு இனிப்பும் 25 ரூபாய் என விற்பனை செய்கிறோம்,'' என தெரிவித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்