தற்கொலைக்கு முன்பு 'கடைசியாக...' 'சகோதரி' மற்றும் 'நண்பனுக்கு' 'ஃபோன்' செய்த 'சுஷாந்த் சிங் ராஜ்புட்...' 'வெளியான புதிய தகவல்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு தன் நெருங்கிய நண்பரான மகேஷ் ஷெட்டிக்கு கடைசியாக போன் செய்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பை பந்த்ரா பகுதியில் இருக்கும் அவரின் வீட்டில் நேற்று மதியம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பாலிவுட் திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 6 மாதங்களாகவே மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா லாக்டவுனின்போது பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாமல் வீட்டில் தனியாக சிக்கிக் கொண்டார். மன அழுத்தத்துடன் தனிமையும் சேர சுஷாந்த் சிங் ராஜ்புட் இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

சுஷாந்த் சிங்கிற்கு தந்தையும், 4 அக்காக்களும் உள்ளனர். அவர்கள் அனைவரும் பீகார் மாநிலம் பாட்னாவில் வசித்து வருகிறார்கள். சுஷாந்த் இறந்த செய்தி அறிந்து அவரின் அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சுஷாந்த் நேற்று காலை 9.30 மணிக்கு தன் அக்காவுக்கு போன் செய்து பேசியிருக்கிறார். கடைசியாக அவர் தனது நண்பரும், டிவி நடிகருமான மகேஷ் ஷெட்டிக்கு போன் செய்துள்ளார்.

சுஷாந்த் போன் செய்தபோது மகேஷுக்கு லைன் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் சுஷாந்த் போன் செய்தது மகேஷ் ஷெட்டிக்கு தெரியவில்லை.

சுஷாந்த் சிங் ராஜ்புட் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தபோது மகேஷ் ஷெட்டி அவருக்கு பழக்கம் ஆனார். சுஷாந்த் மகேஷை தன் சகோதரராக நினைத்திருக்கிறார்.

சுஷாந்த் சிங் ராஜ்புட்டும், மகேஷ் ஷெட்டியும் சேர்ந்து கிஸ் தேஷ் மெய்ன் ஹோகா மேரா தில் தொடரில் நடித்துள்ளனர். அதில் நடித்தபோது தான் சுஷாந்த், மகேஷ் இடையே நட்பு ஏற்பட்டது.

மகேஷ் ஷெட்டி கடந்த மாதம் தன் பிறந்தநாளை கொண்டாடினார். அப்பொழுது அவரை வாழ்த்தி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார் சுஷாந்த் சிங் ராஜ்புட்.

சுஷாந்த் கடைசியாக 3-4 மாதங்களுக்கு முன்பு தன் கிராமத்தில் நடந்த பூஜையில் கலந்து கொள்ள அங்கு சென்றிருக்கிறார். அதன் பிறகு லாக்டவுனால் மும்பையில் சிக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்