'4.5 கோடி மதிப்புள்ள வீடு'... 'மாதந்தோறும் சுஷாந்த் கணக்கிலிருந்து போன இ.எம்.ஐ'...' வழக்கில் புதிய ட்விஸ்ட்'... விசாரணையில் புதிய திருப்பம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் எனவே இந்த வழக்கைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் பலரும் சமூகவலைத்தளங்களில் கோரிக்கை வைத்தார்கள். இதையடுத்து இந்த வழக்கானது சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. இந்த சூழ்நிலையில் சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில், அவரது காதலியான ரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று காதலி ரியாவின் தந்தை இந்திரஜித், சகோதரர் சோவிக், அவரது மேலாளர் சாமுவேல் மிரான்டா, ஸ்ருதி மோடி ஆகிய 6 பேர் மீதும் தற்கொலைக்குத் தூண்டுதல், நம்பிக்கை மோசடி, திருட்டு ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சுஷாந்தின் வங்கி பரிவர்த்தனைகளையும் தங்களின் விசாரணை வளையத்திற்குள் அதிகாரிகள் கொண்டு வந்தனர்.

அதில் புதிய திருப்பமாக சுஷாந்தின் முன்னாள் காதலியும், தோழியுமான அங்கிதாவின் பெயரும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது. அங்கிதா தற்போது வசித்து வரும் வீடானது சுஷாந்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வீட்டிற்கான மாத தவணை சுஷாந்தின் வங்கிக் கணக்கிலிருந்து சென்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வீட்டின் மதிப்பு 4.5 கோடி ஆகும். இது சுஷாந்தின் வழக்கில் புதிய திருப்பமாக அமைந்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த அதிகாரிகள், ''சுஷாந்தின் வங்கி கணக்கினை ஆய்வு செய்தபோது இந்த தகவல் தெரிய வந்ததாகவும், மேற்கொண்டு வேறு ஏதாவது பணப்பரிவர்த்தனை அங்கிதாவுடன் நடந்துள்ளதாக என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும்'' அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இதற்கிடையே தான் தங்கியுள்ள வீட்டிற்கு தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்தே பணம் எடுக்கப்பட்டது என்றும், அதற்கான வங்கி பரிவர்த்தனை நகலையும் அங்கிதா தன்னுடைய சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்