“சுஷாந்த் கேஸை நான் விசாரிக்கிறேன்!”.. ‘அசுர வேகத்தில் வந்த ஐபிஎஸ் அதிகாரி!’.. மாநகராட்சி செய்த காரியம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து புகழ்பெற்ற இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை மும்பை போலீஸார் 40-க்கும் மேற்பட்டோரிடம் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே திடீர் திருப்பமாக சுஷாந்த் சிங் தற்கொலைக்கு அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தான் காரணம் என்றும் அவர் சுஷாந்த் சிங்கிடம் பண மோசடி செய்ததாகவும் சுஷாந்த் சிங்கின் தந்தை பாட்னா போலீசாரிடத்தில் அளித்த புகாரின் அடிப்படையிலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இவ்வழக்கில் பாட்னா போலீசாருக்கு மும்பை போலீசார் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், மும்பை போலீஸார் இவ்வழக்கில் ஒன்றுமே செய்யவில்லை என்றும் பீகார் அரசியல் தலைவர்கள் முன்வைத்த தொடர் குற்றச்சாட்டுக்களை அடுத்து, பீகாரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரி, சுஷாந்தின் வழக்கை விசாரிக்க மும்பை வந்தார்.
ஆனால், மும்பை வந்தடைந்த அவரை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கண்டிப்புடன் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், அதற்கு அடையாளமாக அவரது கையில் முத்திரையும் குத்தியுள்ளதால் இவ்வழக்கு இன்னும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எனினும் மாநிலம் விட்டு மாநிலம் வரும் யாருக்கும் இந்த கொரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிகள் பொருந்தும் என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
‘ஒரே நாளில் 109 பேர்.. இதுவரை இல்லாத அளவில் கொரோனா உயிரிழப்பு!!’..இன்றைய நிலவரம்! முழு விபரம் உள்ளே!
தொடர்புடைய செய்திகள்
- சுஷாந்த் கடைசியா Google-ல 'இதைத்தான்' தேடுனாரு... ஷாக் கொடுத்த கமிஷனர்!
- 'கொரோனா பாதிப்பை குறைத்துள்ள தடுப்பூசி'... 'அமெரிக்கா இதை செய்திருந்தால்'... ஆய்வில் வெளியாகியுள்ள தகவல்...
- “சுஷாந்த்தின் சிம் கார்டு அவர் பேரில் இல்லையா?”.. ‘இறப்பதற்கு முன் 14 சிம் கார்டுகளை மாற்றினாரா?’.. ‘மிரளவைக்கும் காரணம்?’
- 'கர்நாடக முதல்வர் எடியுரப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதி...' 'அவரைத் தொடர்ந்து மகளுக்கும் கொரோனா...' மருத்துவமனையில் அனுமதி...!
- நடுராத்திரி பெரிய 'சூட்கேஸ்' எடுத்துட்டு கார்ல போனாங்க... சுஷாந்த் வழக்கில் புதிய திருப்பம்... கண்டுபிடிக்க முடியாமல் 'திணறும்' போலீஸ்!
- 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!
- கொரோனாவின் நடுங்கவைக்கும் ஸ்கெட்ச்!.. வரவு செலவு கணக்குகளை வெளியிட்ட மத்திய அரசு!.. இந்தியாவின் நிலை இது தான்!
- சென்னையில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது!.. தேனியில் மேலும் 327 பேருக்கு தொற்று உறுதி!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் ஒரே நாளில் 7,010 பேர் கொரோனாவிலிருந்து விடுதலை!.. அச்சுறுத்தும் பலி எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே
- 'அதிகரிக்கும் கொரோனா'... 'இத மட்டும் செஞ்சா 5000 ரூபாய் ஊக்கத்தொகை'... ஜெகன்மோகன் அதிரடி!