சபாஷ் 'சார்', சிறப்பான 'சம்பவம்' பண்ணிருக்கீங்க... திருப்பத்தூர் 'எஸ்.பி'க்கு வாழ்த்துக்களை பகிர்ந்த சின்ன 'தல'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமார் மக்கள் அளிக்கும் புகார்களை குறித்து புகார்தாரர்களிடம் கருத்துக்களை கேட்க வேண்டி Feedback Cell என்ற ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

சபாஷ் 'சார்', சிறப்பான 'சம்பவம்' பண்ணிருக்கீங்க... திருப்பத்தூர் 'எஸ்.பி'க்கு வாழ்த்துக்களை பகிர்ந்த சின்ன 'தல'!
Advertising
Advertising

இதுகுறித்த விளக்க வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதில் பேசிய விஜயகுமார், மக்கள் அளிக்கும் புகார்கள் குறித்து பொது மக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டி Feedback Cell என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன்மூலம் காவல் துறையில் உள்ளவர்கள் மக்களிடம் இன்னும் நெருக்கமாக இருந்து தங்களது கடமைகளை இன்னும் மேம்பட செய்ய முடியும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இந்திய அணி கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 'சிறப்பான இந்த அசத்தல் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்' என குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்