மது விற்பனை தொடர்பாக... உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!.. மாநில அரசுகள் பின்பற்றுமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாஆன்லைனில் மது விற்பனை செய்வது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டு மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
40 நாட்களுக்கும் மேலாக மது கிடைக்காமல் தவித்து வந்த குடிமகன்கள், இப்போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், உற்சாகம் அடைந்துள்ளனர். மதுக்கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. பல்வேறு கடைகளில் கொரோனா குறித்த அச்சம் எதுவும் இன்றி, குடிமகன்கள் தனி மனித இடைவெளியை பின்பற்றுவதில்லை. எனவே மதுக்கடைகள் கொரோனா பரப்பும் ஹாட்ஸ்பாட்டாக மாறும் அபாயம் உள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுக்கடைகளில் சமூக விலகல் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும், மது விற்பனை மற்றும் விதிமுறைகள் தொடர்பாக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று மனுதாரர் கூறியிருந்தார்.
இந்த மனுவானது, நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன்பு காணொலி வாயிலாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மது விற்பனை தொடர்பாக அரசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி அசோக் பூஷன் தெரிவித்தார்.
ஆனால், சமூக விலகல் நடைமுறைகளை பின்பற்றும் வகையில், மறைமுக விற்பனை அல்லது ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்து ஹோம் டெலிவரி செய்வது குறித்து அனைத்து மாநில அரசுகளும் பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். அத்துடன் மனுதாரரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதேபோன்று தமிழகத்தில் மதுபானக் கடை திறப்புக்கு எதிரான வழக்கு விசாரணையின்போது, மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என அரசு கூறியது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தீபாவளி, பொங்கல் பண்டிகை போல் நேற்று ஒரே நாளில் அசரவைக்கும் மதுவிற்பனை.. வசூல்ல இந்த மாவட்டம் தான் முதல் இடம்..!
- 'கொரோனாவுக்கான' மருந்து இந்த 'விலங்கிடம்' இருக்கிறது... 'நம்பிக்கையளிக்கும் ஆய்வு முடிவு...' 'டெக்சாஸ்' ஆராய்ச்சியாளர்கள் 'கண்டுபிடிப்பு...'
- “கொரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டிகிட்டாடா, இந்த வேலைய பாத்தீங்க!”.. கூண்டோடு சிக்கிய மினி வேன் கும்பல்!
- திரு.வி.க. நகரை 'மிஞ்சிய' எண்ணிக்கை... சென்னையிலேயே 'அதிக' பாதிப்புள்ள பகுதியாக 'மாறியுள்ள' மண்டலம்... விவரங்கள் உள்ளே...
- 'தி.நகரில் பரிதாபம்'...'கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க'... 'புரோடக்சன் மேனேஜர் செய்த விபரீதம்'... சென்னைவாசிகளை அதிரவைத்துள்ள சம்பவம்!
- 'கங்கை நீரில்...' கொரோனாவை கட்டுப்படுத்துற 'ஒரு' ஆன்டி வைரஸ் இருக்கு...! 'ட்ரீட்மெண்ட்க்கு பயன்படுத்தலாம்...' அமைப்பு கோரிக்கை...!
- 'மார்ச் முதல் டிசம்பர் வரை...' 'இந்தியாவில் பிறக்கப் போகும் குழந்தைகளின் மலைக்க வைக்கும் எண்ணிக்கை...' 'யுனிசெஃப் அமைப்பு எச்சரிக்கை...'
- 'ஹைட்ராக்சிகுளோரோகுயின் கம்பெனியில் கொரோனா...' '26 பேருக்கு தொற்று உறுதி...' இந்தியாவிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி...!
- 'போதை இளைஞர்களால் பாதிக்கப்பட்ட பெண் புகார்...' 'டாஸ்மாக் பாதுகாப்பு பணிக்கு சென்றதால்...' 'மாலை வரச் சொன்ன போலீசார்...'
- சட்டென '75 ஆயிரத்தை' கடந்த 'பலி' எண்ணிக்கை... 'நடுநடுங்கிப்'போய் நிற்கும் நாடு!