நான் ஒரு 'தன்பாலின' ஈர்ப்பாளர்...! வெளிப்படையாக அறிவித்தவர் உயர்நீதிமன்ற 'நீதிபதியாக' வாய்ப்பு...! - யார் இவர்...? - பரிந்துரைத்த உச்ச நீதிமன்றம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தன்பாலின ஈர்ப்பாளரான மூத்த வழக்கறிஞர் சவுரப் கிர்பாலை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

நான் ஒரு 'தன்பாலின' ஈர்ப்பாளர்...! வெளிப்படையாக அறிவித்தவர் உயர்நீதிமன்ற 'நீதிபதியாக' வாய்ப்பு...! - யார் இவர்...? - பரிந்துரைத்த உச்ச நீதிமன்றம்...!
Advertising
>
Advertising

இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் இந்தியாவில் நீதிபதியாக பதவியேற்கும் முதல் தன்பாலின ஈர்ப்பாளர் சவுரப் கிர்பால் தான் இருப்பார்.



தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என கிர்பால் வெளிப்படையாகவே கூறிவருபவர் ஆவார். இந்த நிலையில் ஏற்கனவே இவரது பெயர் மூன்று முறை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.Supreme Court Recommend Saurabh Kirpal Delhi High Court judge

ஆனால், அவருக்கு அந்த பதவி கிடைக்காதது அவர் ஒரு சுயபாலின ஈர்ப்பாளர் என்ற காரணம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Supreme Court Recommend Saurabh Kirpal Delhi High Court judge

ஆயினும், பல்வேறு காரணங்களால் அவர் நியமிக்கப்படவில்லை. தற்போது சவுரப் கிர்பாலை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் சட்டப் படிப்பை முடித்துள்ள இவர் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான பி.என் கிர்பாலின் மகன் ஆவார்.

SAURABH KIRPAL, HIGH COURT, JUDGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்