"எல்லா பொண்ணுங்களும்"... கருக்கலைப்பு விஷயத்தில்.. உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெண்கள் கருக்கலைப்பு செய்வது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
திருமணமாகாத பெண் ஒருவர், தனது கருவை கலைக்க அனுமதி கோரி வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அந்த பெண்ணின் வழக்கை தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பென்ச், இது தொடர்பாக தீர்ப்பை தற்போது அளித்துள்ளது.
அந்த வகையில், ஒரு பெண் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என முடிவு எடுத்தால் அதை மருத்துவ முறையில் செய்ய உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நீதிபதி தலைமையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "ஒரு பெண் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என முடிவு எடுத்தால் அதை மருத்துவ முறையில் செய்ய உரிமை உண்டு. கருக்கலைப்பு என்பது சட்ட விரோதமாகாது. இந்த உரிமையை மருத்துவக் கருவுறுதல் சட்டம் 1971 (MTP) அனுமதிக்கிறது. அதே போல, திருமணம் ஆன பெண்கள் அல்லது திருமணமாகாத பெண்கள் என்ற பாகுபாடும் இதற்கு கிடையாது.
அனைத்து பெண்களுக்கும், எந்த சூழ்நிலையிலும் மருத்துவ முறையில் பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய சட்டபூர்வமாக இடம் உண்டு" என கூறியுள்ளது.
தொடர்ந்து, "சில சமயங்களில் திருமண உறவுகளில் பெண்கள் வலுக்கட்டாயமாக இழுக்கப்பட்டு, கர்ப்பம் தரிக்கவும் ஆளாகின்றனர். வலுக் கட்டாயமாக கருத்தரித்த பெண்களை அதிலிருந்து காப்பாற்றவும் இந்த சட்டம் அனுமதிக்கிறது. எனவே, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு பிழைத்து வரும் பெண்களைப் போலவே திருமணம் ஆகி வலுக்கட்டாயமாக கர்ப்பம் தரிக்கப்படும் பெண்கள் மற்றும் திருமணம் ஆகாத பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்ய சட்டபூர்வ உரிமை உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் கருக்கலைப்பு தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ள இந்த உத்தரவு தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அந்த உரிமை பெத்த அம்மாவுக்கு மட்டும் தான் உண்டு".. பரபரப்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு..!
- தவறாக போடப்பட்ட ஊசி.. 22 வருசத்துக்கு அப்புறம் வழங்கப்பட்ட பரபரப்பு தீர்ப்பு..
- மே 18-ல் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன்.. செய்தியாளர்களிடம் பேசிய முதல் வார்த்தை..
- "பெத்த அம்மாவை பாத்துக்க முடியாது..ஆனா அவங்க சொத்துமட்டும் வேணுமா?"..விளாசிய நீதிபதிகள்..அடுத்து வெளிவந்த அதிரடி தீர்ப்பு..!
- "என் மனைவி பெண்ணே கிடையாது".. உச்ச நீதிமன்றத்தில் கணவர் கொடுத்த வித்தியாசமான விவாகரத்து மனு..!
- அசிம் பிரேம்ஜி மீது 70 வழக்குகள் போட்ட நபர்.. உச்சநீதிமன்றத்தில் அசிம் சொன்ன வார்த்தை... என்ன மனசுய்யா..!
- “பாலியல் தொழிலாளர்களுக்கு எந்த ஆவணமும் இல்லாம இதை வழங்க வேண்டும்!” - உச்ச நீதிமன்றம் அதிரடி..!
- மாத சம்பளம் வாங்குவோருக்கு குட்நியூஸ்.. ரூ.9000 வரை பென்சன் உயரலாம்.. முழு விவரம் இதோ!
- அவங்க கேட்பதை கொடுங்க... ஆதார், ரேஷன் கார்டு தேவையில்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி
- ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய அப்படி என்ன அவசரம்? அரசியல் உள்நோக்கமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி