'வக்கீல்களின் கருப்பு கோட்டிற்கு கொரோனாவால் வந்த ஆபத்து'... சுப்ரீம் கோர்ட் முக்கிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வக்கீல்கள் வழக்கமாக அணியும் கருப்பு கவுன் மற்றும் கருப்பு கோட்டு அணிவதில் இருந்து விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில்,  சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைகளில் ஆஜராகும் வக்கீல்கள் இனி சாதாரணமான வெள்ளை சட்டை, வெள்ளை சல்வார் கமீஸ் அல்லது வெள்ளை புடவை மற்றும் வெள்ளை கழுத்துப் பட்டையை அணிந்து கொண்டு காணொலி மூலம் விசாரணையில் கலந்து கொள்ளலாம். இது அடுத்த உத்தரவு வரும் வரை இது நீடிக்கும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, வக்கீல்கள் வழக்கமாக அணியும் கருப்பு கவுன் மற்றும் கருப்பு கோட்டு ஆகியவற்றால் வைரஸ் எளிதாக தொற்றும் ஆபத்து இருப்பதாகவும், இதனால் இந்த மரபை சற்று தள்ளி வைக்கலாம் என, நேற்று காணொலி மூலம் நடைபெற்ற விசாரணை ஒன்றில் பங்கேற்ற மூத்த வக்கீல் கபில் சிபலிடம் தலைமை நீதிபதி கூறியதாகவும், அதனை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்