"இத செய்றதுதான் ஒரே பிரார்த்தனையா இருக்கும்!".. ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கைது விவகாரத்தில் .. 'சுப்ரிம் கோர்ட் பரபரப்பு' உத்தரவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் கடந்த 2018-ம் ஆண்டு இறந்த சம்பவத்தில் பிரபல ஆங்கில டி.வி. சேனலான ரிபப்ளிக் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்.

அன்வய் நாயக்கிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காததுதான் காரணம் என அன்வய் நாயக்கின் மகள் அளித்த புகாரின்பேரில் அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரை அலிபாக் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

14 நாட்கள் நீதிமன்ற காவலில் நவிமும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்ட அர்னாப்,  பின்னர் இடைக்கால ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அப்போது அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுத்தனர்.  பின்னர் அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரும் நேற்று அலிபாக் செசன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர், அதுவும் மறுக்கபட்டது.

அதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டை நாடி அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் கேட்டார். அந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக அர்னாப் கோஸ்வாமிக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவிடம், “இந்த எப்.ஐ.ஆரில் சவால் இருக்கும் ஒரு அம்சத்தை பார்க்கிறோம். இந்த ஒரே ஒரு காரணத்தாலேயே அர்னாப் கோஸ்வாமி சிறையில் அடைக்கப்பட்டார். ஆக, இந்த எப்.ஐ.ஆரை ரத்து செய்வதுதான் எஞ்சியிருக்கும் ஒரே ஒரு பிரார்த்த்னையாக இருக்க முடியும்” என்று  நீதிபதி சந்திரசூட் கூறினார். பின்னர் அர்னாப் கோவ்சாமிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்