“இந்த மாதிரி பொண்ணுங்க.. கரும்புத் தோட்டத்துலதான் இறந்து கிடப்பாங்க..?”.. அவங்க 4 பேரும் நிரபராதிகள்!.. சர்ச்சையைக் கிளப்பிய மூத்த தலைவரின் பேச்சு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தையை பற்றி உத்தரப் பிரதேச பாஜகவைச் சேர்ந்த தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவஸ்தவா பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இதுபற்றி அவர், ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்,  குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரை காதலித்து வந்ததாகவும்,  அந்தப் பெண் நடத்தைக் கெட்டவர் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது முகநூல் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அப்பெண் குற்றம்சாட்டப்பட்டவரைக் காதலித்ததை, ஊரே அறியும், ஆனால் இப்படிப்பட்ட பெண்கள் கரும்புத் தோட்டம், புதர்கள், வேறு வயல்வெளிகள், காட்டுப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் எங்கேனும்தான் இறந்து கிடப்பார்கள், ஏன் இப்படியான பெண்கள் நெல் வயல் அல்லது கோதுமை வயலில் இறந்து கிடப்பதில்லை?” என்று கேட்டுள்ளார்.

 

மேலும் பேசியவர், “கைது செய்யப்பட்ட 4 பேரும்  நிரபராதிகள் என உத்தரவாதமாக சொல்கிறேன். அவர்களை விடுதலை செய்யாவிட்டால் மன ரீதியான துன்புறுவார்கள். பிறகு அவர்களது தண்டனைக் காலங்களில் இழந்த இளமையை யார் கொடுப்பார்? இவர்களுக்கான இழப்பீட்டை அரசா கொடுக்கும்?’ என்று கூறியதாக இந்தியா டுடே செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இத்தகைய பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தன் ட்விட்டரில், “இவரிடம் ஒரு நோய்க்கு ஆட்பட்ட, புளித்த பழைமையான மனோபாவமே தெரிகிறது. நான் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப் போகிறேன்” என்று கூறி தன் கண்டனத்தை பதிவு செய்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்