'ரெண்டு டோஸ் தடுப்பூசி போட்டதுக்கு அப்புறம்...' 'பூஸ்டர்' தடுப்பூசி போடணுமா...? - நிதி ஆயோக் மருத்துவர் தகவல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவிவரும் நிலையில், இந்திய அரசு மக்களை தடுப்பூசி போட்டு கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் பரவலாக கோவக்சின் மற்றும் கோவிட்ஷீல்ட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது நிதி ஆயோக் சுகாதாரக்குழு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்த போது, எந்தத்தடுப்பூசியும் 100% பாதுகாப்பு அளிக்க்கும் என சொல்ல முடியாது. தடுப்பூசி போட்ட பின்பு, குறிப்பிட்ட இடைவெளியில் பூஸ்டர் தடுப்பூசி ஏதும் செலுத்த வேண்டுமா என்பது குறித்த ஆய்வு நடந்து வருவதாக கூறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆய்வுகள் முடிந்த பின் இதுகுறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும், கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதோடு, இந்த பூஸ்டர் மற்றும் தடுப்பூசி குறித்தான ஆய்வுகளுக்கு பைஸர் நிறுவனம் மத்திய அரசுடன் பேச்சு நடத்தி வருகிறது. ஜூலை மாதத்திலிருந்து பைஸர் தடுப்பூசி இந்தியாவில் கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிடுள்ளார்.

மேலும் இதுகுறித்து கூறிய பைஸர் நிறுவனம், ஜூலை முதல் அக்டோபர் மாதத்துக்குள் சில நிபந்தனைகளுடன்  இந்தியாவுக்கு 5 கோடி டோஸ் தடுப்பூசிகளை  வழங்கத் தயாராக உள்ளோம். இதனை 12 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் செலுத்தலாம்.

தற்போது இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா பரவி வருவதால், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பாக பைஸர் தடுப்பூசி செயல்படும் எனவும், பைஸர் தடுப்பூசி 2 டிகிரி முதல் 8 டிகிரி வரை செல்சியஸில் ஒருமாதம் வரை வைத்து பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்