'போகாதீங்க டீச்சர்!'.. 'அப்போ பகவான்'.. 'இப்போ அம்ரிதா'.. டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆசிரியை.. கதறி அழுத பிள்ளைகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரியர் பகவான் டிரான்ஸ்ஃபர் ஆனபோது அவரை செல்லவிடாமல் மாணவர்கள் பிடித்துக்கொண்டு அழுத வீடியோ வைரலாகியிருந்தது.

தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த இந்த ஆசிரியர் பகவான் எத்தகைய அன்பு, அறம், அறிவை குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியராக ஊட்டியிருக்க முடியும் என்பதற்கு சான்றாக இருந்தது மாணவர்களின் அந்த பாசப்போராட்டம். இதற்காகவே ஆசிரியர் பகவானுக்கு கடந்த வருடம் பிஹைண்ட்வுட்ஸ் ICON OF INSPIRATION விருது வழங்கி கவுரவித்தது.

இந்த நிலையில் இதேபோன்றதொரு நெகிழ்ச்சி சம்பவம் ஆசிரியை ஒருவருக்கு தற்போது நிகழ்ந்துள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கரிங்குன்னத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்த கே.ஆர்.அம்ரிதா என்பவர் மீது அப்பகுதி கல்வி அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி, அவரும் இன்னொரு ஆசிரியையும் மாணவர்களை துன்புறுத்துவதாகவும் அதனால் அவர்கள் இருவரும் தற்காலிக பணியில் இருந்து பணிநீக்கம் செய்யப்படுவதாகவும் ஆர்டர் போடப்பட்டது. இந்த ஆர்டரை வாங்கியவுடன் அம்ரிதா அழுதுகொண்டே பள்ளியை விட்டு புறப்பட்டபோதுதான் மாணவர்கள் அவரை சூழ்ந்துகொண்டு தேம்பி அழுதுள்ளனர்.

அவர்களின் இந்த பாசப்போராட்டத்துக்கு பின் அந்த ஆசிரியை, அழுதுகொண்டே விடைபெற்றார். ஆசிரியை அம்ரிதா தங்களை நன்றாகவே பார்த்துக்கொண்டதாகவும், நன்றாக வகுப்பெடுத்ததாகவு மாணவர்கள் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்