‘இந்த டிரஸ்ஸெல்லாம் போட்டு வரக்கூடாது’... ‘தடை விதித்த ஆசிரியை’... ‘அதிர்ந்த பெற்றோர், மாணவர்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு கொண்டு, கறுப்பு உடைடயில் வந்த மாணவனை வகுப்பிற்குள் நுழைய ஆசிரியை தடை விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் யாததிரி போங்கீர் மாவட்டத்தில் இந்தியன் மிஷனரி என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவரான பிரனித் ரெட்டி, சபரிமலைக்கு செல்வதற்காக மாலை போட்டுக்கொண்டு, அதற்குரிய கறுப்பு உடைகளை அணிந்து கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது வகுப்பு ஆசிரியை, விரத உடையான கறுப்பு உடைகளுடன் பள்ளிக்கு வரக் கூடாது என்று வகுப்பிற்குள் செல்ல அனுமதி மறுத்துள்ளார்.

மேலும் இந்த உடையுடன் இருக்கும் வரை பள்ளிக்கு வரக்கூடாது என்று, ஆசிரியை அவரை வீட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று போராட்டம் நடத்தியதுடன், பள்ளியிலிருந்த மேஜை, நாற்காலிகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் பற்றி அறிந்து வந்த ஐயப்ப பக்தர்கள் 50 பேர், போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்த வந்த போலீசார், அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திஇ அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர், காவல்துறையினர், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திடம் மாணவனை வகுப்பில் அனுமதிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி , மாணவர் வகுப்பிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BLACK, DRESS, AYYAPPA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்