'ஆசைப்பட்டு 'கம்யூட்டர் சயின்ஸ்' படிக்க போனான்'...'என்ஜினியரிங்' மாணவருக்கு நடந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பல கனவுகளோடு அமெரிக்காவிற்கு படிக்கச் சென்ற மாணவர், சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர் அருகில் உள்ள குவேம்புநகரைச் சேர்ந்தவர் சுதேஷ் பட். இவர் மைசூரில் உபநிஷத் யோகா மையம் நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் அபிஷேக். என்ஜினியரிங் படிப்பில் இருந்த ஆர்வம் காரணமாக பி.இ கம்யூட்டர் சயின்ஸ் முடித்த அபிஷேக், அது தொடர்பான மேற்படிப்பு படிக்க அமெரிக்கா சென்றார்.

அங்கு கலிபோர்னியாவின் சான் பெர்னார்டி னோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வந்த அபிஷேக், பகுதி நேரமாக  சாலையோர உணவு விடுதி ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம்  அபிஷேக் வேலை பார்த்த உணவு விடுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் அபிஷேக் பரிதாபமாக கொல்லப்பட்டார்.

இதுதொடர்பான தகவல் மைசூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அபிஷேக்கின் சகோதரர் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அமெரிக்க மற்றும் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, என்ன நடந்தது, எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருவதாக அபிஷேக்கின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

பல கனவுகளோடு அமெரிக்காவிற்கு படிக்கச் சென்ற இளைஞர் சுட்டு கொல்லபட்ட சம்பவம்  மைசூரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

USSHOOTING, COLLEGESTUDENT, KARNATAKA, ABHISHEK CHAND, MYSURU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்