“இவ்ளோ சென்சிடிவான நேரத்துல இப்படியா பண்ணுவீங்க.? உங்கள நெனைச்சு வெக்கப்படுறேன்!”.. கொதித்தெழுந்த சாக்ஷி தோனி!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு உத்தரவு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசாங்கங்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவியை பணமாகவோ பொருளாகவோ பாதுகாப்புக்காக கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் கிரிக்கெட் வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்ததாகவும், கங்குலி ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான அரிசியை விநியோகம் செய்ததாகவும், இர்பான் பதான், யூசப் பதான் உள்ளிட்டோர் முகக் கவசங்கள் தயாரித்து கொடுத்ததாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில் மகேந்திர சிங் தோனி 1 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்ததாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியானது.
பல்வேறு ஊடகங்களும் இந்த செய்தியை ஒளிபரப்பின. ஆனால் இதுபற்றி தனது ட்விட்டரில் தோனியின் மனைவி சாக்ஷி தோனி, இதுபோன்ற சென்சிடிவான நேரங்களில் தவறான செய்திகளை வெளியிடுவதை நிறுத்துமாறு அனைத்து ஊடகங்களையும் கேட்டுக் கொள்வதாக காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும்
அப்பதிவில், ஊடகங்களைப் பார்த்து, “உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். ஊடக பொறுப்பு என்பது எங்கே செல்கிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!” என்றும் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வதந்தி' பரப்பினால் 'கடும்' நடவடிக்கை... 'வெளிநாட்டு' பயணங்களை 'மறைக்கக் கூடாது..'. அமைச்சர் 'ஆர்.பி. உதயகுமார்' எச்சரிக்கை...
- கடைசில 'அவங்களும்' ஒரேயடியா 'சீனா' பக்கம் சாஞ்சுட்டாங்க... அதிரவைத்த 'அமெரிக்க' அதிபர்... என்ன காரணம்?
- ‘முதியவர்கள் இருவர் உள்பட’... ‘3 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ்’... 'தமிழகத்தில் 38 ஆக அதிகரிப்பு'!
- “உணவு டெலிவரி, காய்கறி கடைகள், பெட்ரோல் பங்க்’ முதலிய சேவைகள் இந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இருக்கும்”!.. முதல்வர் அறிவிப்பின் முழு விபரங்கள் உள்ளே!
- 'குழந்தைகள் ஏன் கொரோனா பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்?'... 'குட்டீஸ்களுக்கு கொரோனாவை புரியவைப்பது எப்படி?'... இந்த வீடியோவ அவசியம் காட்டுங்க!
- '10 மாதக்' குழந்தைக்கு 'கொரோனா' தொற்று... தனிமைப்படுத்தப்பட்டு 'சிகிச்சை'... 'பதற்றத்தில்' குடும்பத்தினர்...
- ‘பரஸ்பர குற்றச்சாட்டு சர்ச்சைக்கு இடையில்’... ‘சீன அதிபருடன், அமெரிக்க அதிபர் திடீர் ஆலோசனை’... வெளியான புதிய தகவல்!
- 'போலீசார்' கையில் 'லத்தி' எடுக்க 'தடை...!' 'பொதுமக்களை அடிக்கவோ, மிரட்டவோ, பயமுறுத்தவோ கூடாது...' 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்' ...
- '135 கி.மீ.,' உணவின்றி நடந்தே சென்ற 'கூலித் தொழிலாளி...' 'ஊரடங்கு' உத்தரவு காரணமாக.... 'போக்குவரத்து' முடக்கப்பட்டதால் 'நேர்ந்த பரிதாபம்'...
- ‘கொரோனாவை’ குணப்படுத்தும்... வதந்தியை ‘நம்பி’ செய்த காரியத்தால்... ‘300 பேருக்கு’ நிகழ்ந்த துயரம்... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...