"என்ன மாதிரி சிங்கிளாவே இருங்க... மக்கள்தொகை பெருக்கத்துக்கு அதுதான் ஒரே சொல்யூஷன்".. MP போட்ட பதிவு.. பத்திக்கிட்ட ட்விட்டர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மக்கள்தொகை பெருக்கத்தினால் வரும் சிக்கல்களை தவிர்க்க சிங்கிளாக இருக்குமாறு அட்வைஸ் கொடுத்துள்ளார் நாகலாந்தை சேர்ந்த எம்பி ஒருவர். அவரது ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

மக்களை தொகை அதிகரிப்பால் உலகத்தின் பல நாடுகள் பல்வேறு வகையான சிக்கல்களை சந்தித்துவருகின்றன. குறிப்பாக இந்தியா, சீனா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகள் அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து ஆகிய தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. இதனை எதிர்கொள்ளும் வகையில் அரசு அளவாக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும்படி பல ஆண்டுகளாக வலியுறுத்திவருகிறது. இதனிடையே நாகாலாந்தை சேர்ந்த எம்பி ஒருவர் தன்னைப்போலவே சிங்கிளாக இருக்கும்படியும் அதுவே மக்கள் தொகை பெருக்கத்திற்கான ஒரே வழி எனவும் தெரிவித்திருக்கிறார்.

உலக மக்கள் தொகை தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று உலக மக்கள்தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது. இது உலகளாவிய மக்கள்தொகை பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. 1989 இல் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் ஆளும் குழுவால் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. 1987 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி, உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனை எட்டியது. இதனை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் தேதி உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

வைரல் ட்வீட்

அந்த வகையில் உலக மக்கள் தொகை தினமான இன்று, பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதனிடையே நாகாலாந்தை சேர்ந்த எம்பியான டெம்ஜென் இம்னா அலோங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உலக மக்கள் தொகை குறித்து பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில்,"உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, மக்கள்தொகைப் பெருக்கத்தின் பிரச்சினைகளில் விழிப்புணர்வோடு இருப்போம் மற்றும் குழந்தைப் பேறு குறித்த அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்வோம். இல்லையென்றால் என்னைப் போலவே சிங்கிளாக இருந்தும் எதிர்காலத்திற்கு பங்களிப்பு செய்ய முடியும். இன்றே சிங்கிள்-களின் இயக்கத்தில் சேருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இது சமூக வலை தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

SINGLE, POPULATION, TEMJEN IMNA ALONG, சிங்கிள், மக்கள்தொகை, எம்பி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்