அதுக்கெல்லாம் கொஞ்சமும் 'எடம்' குடுக்காம... 'கடுமையா' நடவடிக்கை எடுங்க... கிடைத்தது 'கிரீன்' சிக்னல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஊரடங்கை கடுமையாக பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

3-ம் கட்ட ஊரடங்கை தொடர்ந்து 4-ம் கட்ட ஊரடங்கை மே 31-ம் தேதி வரை நீட்டிப்பதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் தளர்வுகள் குறித்தும் விளக்கம் அளித்தது. அதன் அடிப்படையில் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தற்போது சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்கக்கூடாது என்றும் தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சரவை செயலகம் அறிவுறுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்