ஏடிஎம்-ல் ‘பணம்’ எடுக்க... ‘ஜனவரி 1’ முதல் அமலுக்கு வரும் ‘புதிய’ நடைமுறை... பிரபல ‘வங்கி’ அறிவிப்பு...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது.

நாடு முழுவதும் ஏடிஎம் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருவதைத் தடுக்க எஸ்.பி.ஐ புதிய நடைமுறைகளைக் கொண்டு வர உள்ளது. அதன்படி, இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை 12 மணி நேரத்திற்கு எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர் ஏடிஎம் மூலமாக பணம் எடுக்க OTP முறை கட்டாயமாக்கப்பட உள்ளது. வாடிக்கையாளர் வழக்கமாக பணம் எடுக்கும் நடைமுறையில் எந்தவொரு மாற்றமும் இருக்காது.

அதே நேரத்தில், பணம் எடுக்கும் முன் அந்தக் கணக்குடன் பதிவு செய்யப்பட்டுள்ள செல்ஃபோன் எண்ணிற்கு OTP மெசேஜ் வரும். அதில் இருக்கும் எண்ணை ஏடிஎம் இயந்திரத்தில் பதிவு செய்த பின்னரே பணத்தை எடுக்க முடியும். மேலும் இந்த புதிய நடைமுறை இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரையிலான நேரத்தில் ரூ 10,000 அல்லது அதற்கு மேல் எடுப்பவர்களுக்கு மட்டுமே எனக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் எஸ்.பி.ஐ ஏடிஎம் கார்டு மூலமாக வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தாலோ அல்லது மற்ற வங்கி ஏடிஎம் கார்டு மூலமாக எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் பணம் எடுத்தாலோ இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பிற்காக விரைவில் இந்த OTP முறையை மற்ற வங்கிகளும் பின்பற்றலாம் எனக் கூறப்படுகிறது.

SBI, MONEY, BANK, ATM, OTP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்