கொரோனா வந்து ஹாஸ்பிட்டல்ல 'அட்மிட்' ஆனீங்கன்னா 2.50 லட்சம் ரூபாய் தருவோம்...! - தங்கள் ஊழியர்களுக்கு பல 'சலுகைகளை' அள்ளி வழங்கிய பிரபல வங்கி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாட்டின் இயக்கத்திற்கு வங்கித்துறை மிக முக்கியமான ஒன்று ஆகும். அதன்காரணமாக வங்கியில் பணிபுரிபவர்கள் தினசரி வெளியே செல்ல வேண்டியது வரும். எனவே பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.

இதன் காரணமாக பல வங்கிகள் தங்கள் ஊழியர்களுக்கு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியும் தற்போது சலுகைகளை அறிவித்துள்ளது.

ஊழியர்களின் குடும்பம் குடும்பம், பெற்றோர் மற்றும் துணையின் பெற்றோர் முதலானோர் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், ஆளுக்கு 2.50 லட்சம் ரூபாய் தொகை  வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. அல்லது மருத்துவமனையில் சேராமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தப் பட்டிருந்தால் ஒரு நபருக்கு ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது.

எவரேனும் கொரோனா காரணமாக இறந்துவிட்டால், நான்கு ஆண்டு கால சம்பளத்தை முன்கூட்டியே வழங்க இருப்பதாக வங்கி அறிவித்திருக்கிறது. அதேபோன்று பணியாளர்களுக்கு தேவைப்பட்டால் வட்டி இல்லாத முன் தொகையும் வழங்க இருக்கிறது. அதிகபட்சம் ஆறு மாத சம்பளத்தை வட்டி இல்லாமல் பெற்றுக்கொள்ள முடியும் என வங்கி தெரிவித்திருக்கிறது.

இதுவரை இந்தியாவில் 1,200-க்கும் மேற்பட்ட வங்கியில் பணிபுரிபவர்கள் கொரோனா வைரஸ் காரணமாக மரணம் அடைந்திருக்கிறார்கள். 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றால் வங்கி பணியாளர்கள் ஒருவர் மரணம் அடைய நேர்ந்தால், அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க இருப்பதாக பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னுரிமை அடிப்படியில் வங்கி ஊழியர்கள் தடுப்பூசி போடுவதும் முக்கியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்