"Adult ஜோக்ஸ் நானும் சொன்னேன், அப்பதான் ஒரு நாள்".. திடீர்னு நடந்த ட்விஸ்ட்.. Stand Up Comedian பிரவீன் Opens!!
முகப்பு > செய்திகள் > இந்தியா இன்றைய காலகட்டத்தில் ஸ்டான்ட் அப் காமெடி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. பல இடங்களில் ஸ்டான்ட் அப் காமெடி நிகழ்ச்சிகள் நடைபெறும் போது ஏராளமானோர் அரங்கிற்கு வருகை தந்து சிரிப்பலையில் மிதக்கவும் செய்வார்கள்.
Images are subject to © copyright to their respective owners
மேலும் இதன் காரணமாக, பல ஸ்டான்ட் அப் காமெடியன்களும் பிரபலமாக உள்ளனர். அந்த வகையில், பல ஆண்டுகளாக ஸ்டான்ட் அப் காமெடி செய்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி உள்ளவர் பிரவீன். தனக்கே உரித்தான பாணியில் காமெடி செய்து கலக்கும் பிரவீன், சமீபத்தில் Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார்.
முதலில் தான் ஸ்டான்ட் அப் காமெடி செய்வதற்காக மேடை ஏறியது பற்றி பேசி இருந்த பிரவீன், தன்னுடைய ஜோக்கிற்கு யாரும் சிரிக்காததால் மேடையில் இருந்து வெளியேறி தனியாக தேம்பி தேம்பி அழுததாகவும் பின்னர் பெற்றோர் மற்றும் மனைவி ஆகியோரின் ஆதரவுடன் அதில் இருந்து மீண்டு வந்தது பற்றியும் பேசி இருந்தார்.
அதேபோல பொதுவாக ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் நிறைய டபுள் மீனிங் ஜோக்ஸ் மற்றும் அடல்ட் கன்டென்ட் உள்ளிட்ட விஷயங்களை அதிகம் பேசுவார்கள் என்றும் பிரவீன் அப்படி எதையும் பயன்படுத்தவில்லை என்பது பற்றியும் கேட்கப்பட்ட இதற்கான காரணம் சொன்ன பிரவீன், "ஆரம்பத்தில் நானும் அடல்ட் ஜோக்ஸ் எல்லாம் எடுத்தேன். எல்லாரும் பண்ற மாதிரி தான் நாமளும் பண்ணனும் அப்படின்னு. அடல்ட், நாட்டி, டபுள் மீனிங் ஜோக்ஸ்ன்னு எல்லாத்தையும் சொல்லிட்டு இருந்தேன்.
முதல் முறை என்னோட ஷோ ஒன்னு பாக்குறதுக்காக அம்மா வந்தாங்க. அப்போ ஒரு Uncomfrotable ஆ இருந்துச்சு. அப்பதான் ஒரு விஷயத்தை உணர்ந்தேன், இது மத்தவங்க பண்றாங்கன்னு நம்ம பண்ணிட்டு இருந்தோம்.
நம்ம நேச்சுரலா இருக்கணும், நம்ம இது பண்ணக் கூடாது அப்படின்னு. ஒன்னு சொல்லும் போது நமக்கே ஒரு கம்ஃபர்ட்டபிள் இல்லாம இருந்தது என்றால் அதை ஆடியன்ஸ் ரொம்ப ஈஸியா கண்டுபிடிச்சுடுவாங்க. நம்ம எந்த அளவுக்கு நேச்சுரலா, நம்மள மாதிரி இருக்குமோ அப்ப தான் ஆடியன்ஸ் அந்த அளவுக்கு நம்மளை ஏத்துப்பாங்க" என பிரவீன் கூறினார்.
அதே போல, தான் இயல்பாக காமெடி செய்வதால் குடும்பத்துடன் உட்கார்ந்து பலரும் பார்ப்பதாகவும், அடல்ட் கன்டென்ட் இல்லாத ஜோக்குகளை சொல்லும் போது அதனை மக்கள் சிறந்த முறையில் வரவேற்கிறார்கள் என்றும் பிரவீன் குறிப்பிட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்