ஐயோ, எங்க மகன் ஜெயில்ல 'சாப்பிட' கூட இல்லயே...! கொண்டு போன 'சாப்பாட்டையும்' திருப்பி அனுப்பிட்டாங்க...! 'இதையாவது கொடுத்துடுங்க...' - உருகிய 'ஷாருக்' குடும்பம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷாருக்கான் மகனுக்கு அவருடைய தாயார் மணியார்டர் அனுப்பியுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த நிலையில் அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷாருக் மகன் ஆர்யன் சிறையில் தரும் எந்த உணவையும் உண்ணாமல் அங்கிருக்கும் தண்ணீர் மற்றும் பிஸ்கட் சாப்பிட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆர்யன் கான் தாயார் கொண்டு வந்த சாப்பாட்டையும் சிறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவு வந்தால் தான் அனுமதிக்க முடியும் எனக் கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், ஷாருக்கான் குடும்பம் சிறையில் இருக்கும் தங்களின் மகன் ஆர்யன் கானுக்கு சிறை கேன்டினில் செலவழிப்பதற்காக ரூ.4,500 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பியுள்ளனர்.

பொதுவாகவே சிறையில் இருப்பவர்களுக்கு அவர்களின் குடும்பம் அதிகபட்சமாக ரூ.4,500 மட்டுமே மணியார்டர் அனுப்ப முடியும் என்பதால், அவர்கள் அந்த தொகையை அனுப்பியுள்ளதாக சிறை கண்காணிப்பாளர் நிதின் வேச்சல் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்