வாழ்த்துக்கள்!.. ‘சேர்ந்து பணியாற்ற தயாராக இருக்கோம்’.. மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை பிரதமர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மக்களவைத் தேர்தலில் பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11 -ம் தேதி முதல் மே 19 -ம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில், வேலூர் தவிர மொத்தம் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிகை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாஜக 300 -க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. இதனால் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. இதனை அடுத்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாலை 5 மணியளவில் கட்சி தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே தனது டுவிட்டர் பக்கத்தில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,‘ மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துக்கள். நாங்கள் மீண்டும் உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவோம்’ என பதிவிட்டுள்ளார். அதேபோல் இலங்கை அதிபர் சிறிசேன மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்