VIDEO: ‘அய்யோ அவருக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க’!.. ஹைதராபாத் வீரர்களையும் ‘அதிர்ச்சி’ அடைய வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் வீசிய பந்து சூர்யகுமார் யாதவின் ஹெல்மெட்டில் பலமாக அடித்த வீடியோ வெளியாகியுள்ளது.

ஐபிஎல் (IPL) தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் (Ishan Kishan) 84 ரன்களும், சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) 82 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஒவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது. இதில் அதிகபட்சமாக கேப்டன் மனிஷ் பாண்டே 69 ரன்களும், ஜேசன் ராய் 34 ரன்களும், அபிஷேக் ஷர்மா 33 ரன்களும் எடுத்தனர். மும்பை அணியைப் பொறுத்தவரை பும்ரா, நாதன் கூல்டர்-நைல் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், டிரெண்ட் போல்ட் மற்றும் ப்யூஸ் சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில், இப்போட்டியின் 19-வது ஓவரை ஹைதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் (Umran Malik) வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட சூர்ய்குமார் யாதவ் தொடர்ந்து 3 பவுண்டரிகளை விளாசினார். அப்போது அந்த ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்டபோது, பந்து பேட்டில் பட்டி அவரது ஹெல்மெட்டில் பலமாக அடித்தது. இதனால் சூர்யகுமார் யாதவ் நிலைகுலைந்து போனார்.

இதனால் ஹைதராபாத் வீரர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து உடனடியாக மைதானத்துக்கு வந்த பிசியோ, சூர்யகுமார் யாதவை பரிசோதனை செய்தார். இதனைத் தொடர்ந்து விளையாடிய அவர், ஜேசன் ஹோல்டர் வீசிய 20 ஓவர் அவுட்டாகி வெளியேறினார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் காஷ்மீரைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ளார். தான் விளையாடிய அறிமுக போட்டியிலேயே மணிக்கு 151 கி.மீ வேகத்தில் பந்து வீசிய அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிய வீரர்களில் உம்ரான் மாலிக் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்