மாற்றுத் திறனாளி அப்பாவின் பாசம்.. கலெக்டர் பகிர்ந்த நெகிழ்ச்சியான வீடியோ.. ஹார்ட்டின்களை பறக்கவிட்ட நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மாற்றுத் திறனாளி தந்தை ஒருவர் தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | பந்து போடுற ஸ்டைலே ஒரு மார்க்கமா இருக்கே.. இந்திய வீராங்கனையின் வித்தியாசமான சூழலில் க்ளீன் போல்டான நெட்டிசன்கள்..!

இணையம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில், உலகில் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் சம்பவங்கள் கூட மக்களின் கவனத்தினை ஈர்த்துவிடுகிறது. குறிப்பாக எளிய மக்களின் பாசத்தையும் அவர்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக வெளிவரும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் எப்போதும் வைரலாக பரவுவதுண்டு. அந்த வகையில் மாற்றுத் திறனாளியான தந்தை ஒருவர் தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

அப்பாவின் அன்பு

ஐஏஎஸ் அதிகாரியான சொனால் கோயல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், மாற்றுத் திறனாளியான தந்தை ஒருவர் தனது மகனை மடியில் அமர்த்தியடி மூன்று சக்கர வாகனத்தை ஒட்டிச் செல்கிறார். அந்த வாகனத்தின் பின்புறத்தில் பள்ளிச் சீருடை அணிந்தபடி ஒரு சிறுமி அமர்ந்திருக்கிறார். கூடவே அவர்களது பள்ளி பைகளும் அந்த வாகனத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வீடியோவை சொனால் கோயல் பகிர்ந்து "அப்பா" எனக் குறிப்பிட்டு கைகூப்பும் ஸ்மைலியையும் இதய ஸ்மைலியையும் பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நெகிழ்ந்துபோன நெட்டிசன்கள்

மாற்றுத் திறனாளி தந்தை ஒருவர் தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து,"வாழ்க்கையில் எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் ஒருவர் எவ்வாறு பொறுப்புடனும் அன்புடனும் இருக்கவேண்டும் என்பதை இந்த வீடியோ விளக்கிவிட்டது" என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

அதேபோல இன்னொருவர்,"எளிமையான மக்களிடம் எந்த அளவு அன்பு நிறைந்து நிற்கிறது என்பதை அறிந்துகொண்டேன்" என கமெண்ட் செய்துள்ளார். இப்படி தங்களது தந்தையுடனான நெகிழ்ச்சியான சம்பவங்களையும் நெட்டிசன்கள் கமெண்டாக பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த வீடியோவை 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.

 

Also Read | உலக நாடுகளுக்கு பரவிய புதிய வகை குரங்கு அம்மை... தடுப்பூசி இருக்கா.‌.? நிபுணர்கள் சொல்வது என்ன?

 

FATHER, CHILDREN, SCHOOL, TRICYCLE, மாற்றுத் திறனாளி அப்பா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்