'உங்களை வேலைய விட்டு தூக்கியாச்சு'... 'மெயில் வரும்'... 'காய்கறி விற்ற ஐடி என்ஜினீயர்'... எதிர்பாராமல் வந்த சர்ப்ரைஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஐடி வேலை பறிபோய் காய்கறி விற்கப் போன பெண் பொறியாளருக்கு நடிகர் சோனு செய்த உதவி பலரையும் நெகிழச் செய்துள்ளது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பல மக்களின் வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பாலிவுட் நடிகர் சோனு சூட், களத்தில் இறங்கிப் பல உதவிகளைச் செய்து வருகிறார். பல வெளிமாநில தொழிலாளர்கள் வேலைக்குச் சென்ற இடங்களில் சிக்கிக் கொண்ட நிலையில், நடிகர் சோனு சூட் தன்னுடைய சொந்த செலவில் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்ல பல உதவிகளை அளித்தார். பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தார். இவர் ஒடிசா, பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களையும் அவர் தன்னுடைய சொந்த செலவில் அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். அதோடு பல தொழிலாளர்களை விமானம் மூலம் தனது சொந்த செலவில் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தார். அதே போன்று ட்விட்டரில் உதவி கேட்கும் பலருக்கும் பல உதவிகளைச் செய்து வருகிறார். சமீபத்தில் மகள்களை வைத்து ஏர் உழுத விவசாயிக்கு டிராக்டரை அனுப்பி வைத்தார். இவ்வாறு நடிகர் சோனு சூட் பல உதவிகளைச் செய்து வரும் நிலையில் வேலையிழந்து தவித்து வந்த ஐடி பொறியாளருக்கு வேலை வழங்கி பலரையும் மீண்டும் நெகிழ செய்துள்ளார்.

சாரதா என்ற ஐடி பொறியாளருக்கு திடீரென வேலை பறிபோயுள்ளது. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்த அவர், காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இதுகுறித்து ஒருவர் ட்விட்டரில் பதிவிட, தற்போது அந்த பெண்ணுக்கு வேலை வழங்கியுள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், எங்களது அதிகாரிகள் அவரை சந்தித்தனர். நேர்காணல் முடிந்து வேலைக்கான கடிதம் அனுப்பப்பட்டு விட்டது. ஜெய்ஹிந்த் எனத் தெரிவித்துள்ளார். நெட்டிசன்கள் பலரும் சோனுவின் செயலுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்