'என்னோட மதுபாட்டில எடுத்து ஏன் குடிச்ச'... 'தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாவீட்டில் வாங்கி வைத்திருந்த மதுவை எடுத்து குடித்த தந்தையை, தாயின் முன்னிலையில் மகன் அடித்து உதைத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“எனக்குத் தெரியாது.. நான் அதை எடுக்கவில்லை” என்று பயத்தில், 60 வயது மதிக்கத்தக்க ஒருவர், இளைஞரிடம் அரை நிர்வாணகோலத்தில், மிகவும் கொடூரமாக அடி வாங்கும் வீடியோ காட்சிகள், கேரளாவில் வாட்ஸ் ஆப் மற்றும் ஃபேஸ்புக்கில் வைரலானது. இதையடுத்து, போலீசார் விசாரணையில் இறங்கினர். அதில், கேரளா மாநிலம் ஆழப்புழாவில் உள்ள குரதிக்காடு பகுதியைச் சேர்ந்தவரான 29 வயது இளைஞர் ரத்தீஸ் மற்றும் அவரது தந்தை என்பது தெரியவந்தது.
மகன் ரத்தீஸ், கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மதுக்கடைகள் விடுமுறை என்பதால், அக்டோபர் 1-ம் தேதியான செவ்வாய்கிழமை அன்று, மதுபாட்டில் ஒன்று வாங்கி வந்து, வீட்டில் மறைத்து வைத்துவிட்டு வெளியே சென்றிருந்தார். இதனைக் கண்ட அவரது தந்தை, அதை எடுத்து குடித்துவிட்டதாகத் தெரிகிறது. பின்னர், வீட்டிற்கு வந்த மகன் ரத்தீஸ், மதுபாட்டில் காணததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சந்தேகமடைந்த மகன் ரத்தீஸ், தனது தந்தையை கடுமையாக தாக்த ஆரம்பித்தார். எனக்கு தெரியாது என்று தந்தை கெஞ்சியும் கேட்காமல், அவரை கொடூரமாக காலால் எட்டி உதைத்து தாக்க ஆரம்பித்தார்.
அவர் தாக்குதலை, அவரது தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் தடுக்க முயன்றும், மகன் ரத்தீஸ் தாக்க ஆரம்பித்தார். வலிதாங்கமுடியாமல், அந்த தந்தை மகனிடம் மதுவை எடுத்து குடித்ததற்கு மன்னிப்பு கேட்டும், மகன் அடித்துக் கொண்டிருந்தார். இதனை அருகில் இருந்தவர்கள் செல்போனில் படம்பிடித்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ ஆரம்பத்தில், பசுமை கேரளா என்ற பேஸ்புக் குழுவில் அக்டோபர் 1-ம் தேதி வெளியிடப்பட்டு வைரலானது. பின்னர் போலீசாரின் நடவடிக்கைக்குப் பின்னர் அந்த வீடியோ காட்சிகள் அகற்றப்பட்டன. மேலும் தந்தையை தாக்கிய ரத்தீஸ் மீது, 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்த போலீசார், தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பணம் இருந்து என்னத்துக்கு ஆகுறது?'...'அம்மா'வ இந்த நிலையில பாக்க முடியல'...சென்னை என்ஜினீயரின் அதிரவைக்கும் முடிவு!
- ‘கடலில் சிக்கி உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்’.. ‘கண்ணீர் மல்க சல்யூட் அடித்து வீரவணக்கம் செய்த மகள்’.. நெகிழ்ச்சி சம்பவம்..!
- ‘கடவுள்தான் பண்ணச் சொன்னாரு’.. ‘2 வயதேயான மகளைக் கொன்றுவிட்டு’.. ‘தந்தை கொடுத்த வாக்குமூலம்’..
- 'பச்சக் குழந்தைனு கூட பாக்காம'.. 'மிருகத் தனமாக தாக்கும் தந்தை'.. மிரளவைக்கும் சம்பவம்!
- '75 வயது தாயை செருப்பால் அடித்த மகன், மருமகள்'... 'நூதன தண்டனை கொடுத்த நீதிபதி'!
- 'கண்ணுல பயத்தை பாத்தேன்'...'அந்த டிரைவரை திட்டாதீங்க'... 'கேரள வைரல் பெண்ணின் பரபரப்பு பேட்டி'!
- ‘விதிகளை மீறிய அடுக்குமாடி குடியிருப்புகள்’... 'மின்சாரம், குடிநீர் வசதியை துண்டித்த கேரள அரசு'!
- 'மனைவி' உடைமாற்றும் வீடியோ..தெனமும் வந்ததால 'ஷாக்கான' கணவன்..இப்படியும் ஒரு வில்லனா?
- 'யாரு சாமி இந்த பொண்ணு'...'பஸ்ஸுன்னா நாங்க பயந்துருவோமா?'...மாஸ் காட்டிய பெண்...தெறிக்கவிடும் வீடியோ!
- ‘எங்க இருக்கும்னு சொன்னா அங்க டெலிவரி பண்ணிடுவாங்க’.. ‘நாய்க்கு தினமும் வரும் ஆன்லைன் உணவு’..