‘லாக்டவுனில் மளிகை பொருட்கள் வாங்க போன பேச்சுலர்!’.. ‘மணமகளுடன் வீடு திரும்பியதால் பரபரப்பு!’ .. வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்தது. இந்த நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு இரண்டு கட்டமாக பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும், போது யாரும் தேவையின்றி அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வேறு எதற்கும் வெளியே செல்லக்கூடாது என்கிற கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் ஒரு தாய் தன் இளம் வயது மகனை கடைக்குச் சென்று காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்கி வருவதற்காக கேட்டுள்ளார். அவரும் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்கி வருவதாக சொல்லிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் திரும்பி வந்தவர் அனைவருக்கும் கொடுத்ததுதான் அதிர்ச்சியான விஷயம்.‌ ஆம், வந்தவர் காய்கறி மற்றும் மளிகை பொருட்களுடன் வராமல் ஒரு பெண்ணை உடன் அழைத்து வந்து அந்தப் பெண்ணை தற்போது, தான் திருமணம் செய்து கொண்டுவிட்டதாகவும் தாங்கள் இருவரும் தற்போது புது மணமக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞரின் தாயார் இதை முதலில் நம்பாமலும், அதேசமயம் இந்த செயல் உண்மையாக என அறிந்ததும் இதற்கு ஆத்திரப்பட்டுமுள்ளார்.‌ எனினும் அடுத்த கட்டமாக அந்த தாயார் தன் மகனையும், அவர் அழைத்து வந்த அந்த பெண்ணையும் போலீசார் முன்னிலையில் சென்று நிறுத்தி, தான் ஊரடங்கில் வீட்டைவிட்டு கூட வெளியே வராத சூழலில் தன்னை போலீஸ் நிலையத்திற்கு தன் மகன் அழைத்து வந்துவிட்டதாகவும் கூறியதோடு தன் மகன் தற்போது செய்த காரியத்தையும் பற்றி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த மன மக்களிடம் திருமணம் செய்து கொண்டதற்கான ஆதாரங்களை கேட்டபோது, அவர்களோ தங்கள் திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதரிடம் அதற்கான சான்றிதழை கேட்டதாகவும், ஆனால் அவர் லாக்டவுன் முடிந்த பிறகே, சான்றிதழ் வழங்க ஒப்புக் கொண்டதாகவும்

தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்