'எவ்வளவு நேக்கா பிளான் பண்ணி இருகாங்க'...'மருமகன்களுக்கு இது பெரிய ஷாக்கிங் நியூஸ்'... உயர்நீதிமன்றம் அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணத்தின் போது பரிசுப் பத்திரத்தின் மூலமாகச் சொத்து எழுதி வாங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தலிபரம்பாவைச் சேர்ந்தவர் ஹென்றி தாமஸ். இவருக்கு ஒரே ஒரு மகள் இருக்கிறார். இவருக்கும் டேவிஸ் ரபேல் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு திருமணமும் நடைபெற்றது. திருமணத்தின் போது செயிண்ட் பால் தேவாலயம் சார்பில் பரிசுப் பத்திரத்தின் மூலம் டேவிஸ் ஹென்றியின் சொத்தை எழுதி வாங்கியதாகக் கூறப்படுகிறது.

அதேபோன்று மாமனார் ஹென்றி, மருமகன் டேவிஸை தனது குடும்பத்தில் ஒருவராகத் தத்தெடுத்துள்ளார். இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட டேவிஸ் மாமனாரின் சொத்தை சட்டப்பூர்வ உரிமை கோரி இருக்கிறார். இதனால் அதிர்ந்துபோன மாமனார் ஹென்றி, இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், ''மருமகன் டேவிஸ் தனது சொத்துகளில் அத்துமீறி நுழைவதற்கும், சொத்து மற்றும் வீட்டின் உடைமைகளை அனுபவிப்பதற்கும், தலையிடுவதற்கும் நிரந்தர தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி என். அனில் குமார் விசாரித்தார். அப்போது ஹென்றி தாமஸுக்காக வாதாடிய வழக்கறிஞர், டேவிஸ் தனது சொந்த பணத்தில் ஒரே ஒரு வீடு மட்டுமே கட்டியிருக்கிறார் என்றும், அவர் தனது வீட்டில் தான் வசித்து வருவதாகக் குறிப்பிட்டார். 

மேலும் அவருக்குத் தனது சொத்தில் சட்டப்பூர்வமா உரிமை கோர அனுமதி இல்லை எனவும் தெரிவித்தார். டேவிஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குடும்பத்திற்காகத் தேவாலய அதிகாரிகளால் கூறப்பட்ட பரிசுப் பத்திரம் நிறைவேற்றப்பட்டதால், சொத்தின் தலைப்பே கேள்விக்குறியானது என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ''மாமனாரின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அனுபவிக்கவோ, உரிமை கோரவோ மருமகனுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றும், மாமனார் வீடு கட்ட மருமகன் பணம் கொடுத்து உதவி இருந்தாலும் அதில் உரிமை கோர முடியாது'' எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்