‘மன்னிச்சுடுங்க .. மனைவி, குழந்தைங்கள கொன்னுட்டேன்’.. குடும்ப வாட்ஸ் ஆப் குரூப்பை நடுங்கவைத்த நபர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவறுமையின் கோர தாண்டவத்தால் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் சாகப்போவதாக கணவர் ஒருவர் குடும்ப வாட்ஸ் ஆப் குரூப்பில் வீடியோ பதிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குர்கான், நொய்டா உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்து, பின்னர் பெங்களூருவில் பணிபுரிந்து வந்தவர், உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் பகுதியைச் சேர்ந்த 34 வயதான சாஃப்ட்வேர் இன்ஜினீயரான சுமித் குமார். இவர் கடந்த டிசம்பர் மாதம் தனது வேலையை ராஜினாமா செய்ததோடு, தனது சொந்த ஊரான காசியாபாத்திலேயே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
பின்னர் அதிக பண நெருக்கடி, கடன் முதலான சுமைகளைத் தாளாமல் சிக்கலில் இருந்து வந்துள்ளார் சுமித். இந்த சூழலில்தான் நேற்று அதிகாலையில் சுமித் தனது குடும்ப வாட்ஸ் ஆப் குரூப்பில், தனது 3 குழந்தைகளையும் மனைவியையும் கொன்றுவிட்டதாகவும், அதற்காக, தான் மன்னிப்பு கேட்பதாகவும் கூறியவர், தொடர்ந்து தானும் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்யப்போவதாக வீடியோ ஒன்றை பதிவு செய்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுமித்தின் தங்கை, சுமித்தின் மனைவியான அஞ்சு பாலாவின் சகோதரருக்கு கொடுத்த தகவலின்பேரில் அஞ்சுபாலாவின் சகோதரர், சுமித்தின் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு சுமித்தின் மனைவி அஞ்சு பாலாவும், சுமித்-அஞ்சுபால தம்பதியரின் 3 குழந்தைகளும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தனர்.
ஆனால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறியிருந்த சுமித் அங்கு இல்லை. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சுமித்தை தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '2-ம் நம்பர பிரஸ் பண்ண சொன்னாங்க’.. பாஜகவுக்கு ஓட்டு போட சொன்னார்களா தேர்தல் பணி அதிகாரிகள்?
- '8 மணிக்கு ஷார்ப்பா வர, நான் எம்பயரில் டின்னரும்..மிலோனாவில் ஐஸ்க்ரீமும் சாப்டல..' கான்ஸ்டபிளின் உருக்கமான கடிதம்!
- 'ஜெயிக்கணும்னா இவங்கள பாலோ பண்ணுங்க'...'கோலி'க்கு அட்வைஸ்' செஞ்ச பிரபல வீரர்!
- ’இனி எல்லாம் ஸ்பீடா நடக்கும்’.. 100 ரோபோக்களை வேலைக்கு வைத்த ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம்!
- 'தாதாக்கு இருப்பதோ 600 கோடிக்கு சொத்து'...ஆனால்...பட்டப்பகலில் நிகழ்ந்த சோகம்!
- 650 பேருக்கு இலவச ‘அபிநந்தன் கட்டிங்’.. அசத்தும் சலூன்காரர்.. என்ன காரணம்?