'மேக்-அப் ரூம்க்கு போன என்ஜினியர் மாப்பிள்ளை'.. 'திருமணத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக'.. நடந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணம் நடக்கவிருந்த அரை மணி நேரத்துக்கு முன்பாக இளம் மென்பொருள் என்ஜினியர் ஒருவர், திருமண மண்டபத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தின் மெட்சல் மாவட்டத்தில் உள்ள கொம்பல்லி திருமண மஹாலில், திருமணம் செய்துகொள்ளப் போவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக, இளம் மாப்பிள்ளையும் சாஃப்ட்வேர் என்ஜினியருமான சந்தீப் மேக்-அப் அறைக்குள் சென்றுள்ளார். அவர் திரும்பி வருவாரென மொத்த குடும்பமும் காத்திருக்க, சந்தீப் இன்னும் அறையை விட்டு வெளிவராதது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனே போய் அந்த அறைக்கதவை அனைவரும் தட்டிப் பார்த்துள்ளனர். சந்தீப் கதவைத் திறக்காததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாப்பிள்ளை சந்தீப் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து திருமணத்துக்கு வந்த அனைவருமே அதிர்ந்துள்ளனர்.
சந்தீப்பின் தற்கொலைக்கான காரணம் சரிவர தெரியவில்லை என்கிற சூழலில், பெட் பஷீர்பாத் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
NOTE: Suicide is never an option for any problem. For people struggling from suicidal thoughts, here is a helpline of Sneha (Suicide Prevention) Centre - 044 2464 0050.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மேரேஜ் மட்டுமில்ல.. மேட்சும் ஒரு டைம்தான் சார் வரும்!'.. கல்யாணத்துல மாப்பிள்ளை செஞ்ச காரியம்!
- 'மகனையும், மகளையும் தொந்தரவு பண்ணாதீங்க'...'சிக்கிய உருக்கமான கடிதம்'...சென்னையில் நிகழ்ந்த சோகம்!
- கணவர் வெளிநாட்டில்.. 'மைனர் தோழிக்கு திருமணம் செய்துவைத்த பள்ளி மாணவியின் சோக முடிவு!
- ‘இது அவளுக்கு ரொம்ப பிடிக்கும்’... ‘மகளின் இறுதிச் சடங்கில்’... ‘பாசம் நிறைந்த’... ‘தந்தை செய்த காரியம்’!
- 'நைட் 2.30 மணிக்கு போன் வந்துச்சு'.. 'பெண் என்ஜினியரின் வங்கிக் கணக்கில்' இருந்து லட்சக்கணக்கில் 'அபேஸ்' செய்த கும்பல்!
- 'கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச நாள்தான்'... ‘அதுக்குள்ள நொடியில்’... ‘இளம்ஜோடிக்கு நேர்ந்த பரிதாபம்'!
- ‘தடுமாறி விழுந்த இளம்பெண்’.. ‘நொடிப்பொழுதில் நடந்து முடிந்த கோர விபத்து’.. ‘அதிரவைக்கும் வீடியோ’..
- ‘வயோதிகம்’... ‘உடல்நலம் குன்றிய மகன்’... 'தந்தை எடுத்த விபரீத முடிவு'!
- மனைவியின் 'பல்வரிசை சரியில்லை'.. என்பதைக் காரணமாகச் சொல்லி கணவர் செய்த பகீர் காரியம்!
- 'மண்ணைத் தோண்டி'.. 'பச்சிளம் குழந்தையை'.. 'உயிரோடு'.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்!