‘பேஸ்புக்கில் லைவ்’.. ‘உடனே வந்த ஒரு போன்கால்’.. ‘32 காஷ்மீர் பெண்களுக்கு உதவிய இன்ஜினீயர்’ குவியும் பாரட்டுக்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் தவித்த 32 காஷ்மீர் பெண்களுக்கு உதவிய இன்ஜினீயருக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கடந்த சில தினங்களுகு முன்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35A சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டன. அதனால் அம்மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிகப்பட்டது. மேலும் தொலைபேசி, இணைய சேவைகள் முடக்கப்பட்டன. இதனால் வெளியூரில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் தவித்துள்ளனர்.

அப்போது மென்பொருள் பொறியாளரான ஹம்ரிந்தர் சிங் என்பவர், சொந்த ஊருக்கு திரும்ப விரும்பும் மாணவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் என பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார். இதனைப் பார்த்த பெண் ஒருவர் ஹம்ரிந்தர் சிங்கிற்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார். மேலும் தன்னையும் சேர்ந்து 32 மாணவிகள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவிப்பதாக கூறியுள்ளார். இப்பெண்கள் புனேவில் தங்கி நர்சிங் படித்து வந்துள்ளனர்.

உடனே ஹம்ரிந்தர் சிங் தனக்கு தெரிவந்தவர்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து அனைத்து மாணவிகளையும் ஸ்ரீநகருக்கு அனுப்பி எண்ணியுள்ளார். ஆனால் அனைத்து மாணவிகளும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஊருக்கு செல்ல பணமில்லாமல் தவித்துள்ளனர். இதனை அறிந்த ஹம்ரிந்தர் சிங் மீண்டும் பேஸ்புக்கில் லைவ் செய்து மாணவிகளின் நிலையை எடுத்துக்கூறி உதவி கேட்டுள்ளார்.

இதனைப் பார்த்த தொழிலதிபர் ஒருவர் அனைத்து மாணவிகளுக்கும் உதவுவதாக கூறி விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் மாணவிகள் உடன் பயணிக்க 4 தன்னார்வலர்களையும் ஏற்பாடு செய்துள்ளார். இதனை அடுத்து அனைத்து மாணவிகளும் விமானம் மூலம் ஸ்ரீநகர் சென்று அங்கிருந்து தங்களது சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் ஹம்ரந்தர் சிங்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

FACEBOOK, DELHI, SOFTWARE, ENGINEER, PUNE, KASHMIR, GIRLS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்