‘24 மணிநேரத்தில் 195 பேர் பலி’... ‘இந்தியாவில் சமூக பரவலா?’... 'மத்திய சுகாதாரத்துறை விளக்கம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருவதால், கொரோனா பாதிப்பின் 3 - வது நிலையான சமூக பரவல் என்ற நிலையை கொரோனா பாதிப்பு எட்டிவிட்டதோ என்ற என்னும் நிலையில், இதுகுறித்து பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ‘இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவல் என்ற நிலையை இன்னும் எட்டவில்லை. லாக்டவுன் அமலில் உள்ள தற்போதைய காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைந்து வருவது அதிகரித்திருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் இன்றைய நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 5 மணி (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி நாடு முழுவதும் 46 ஆயிரத்து 711 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 31 ஆயிரத்து 967 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 13 ஆயிரத்து 160 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 195 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 583 ஆக அதிகரித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அடுத்த ஆட்டத்தை தொடங்கிய கொரோனா'... 'அமெரிக்காவை தொடர்ந்து நிலைகுலைந்த நாடு'...கதிகலங்கி போன மருத்துவர்கள்!
- கொரோனா தொற்று காலகட்டத்தில்... மதுக்கடைகள் திறக்கப்படுவது ஏன்?.. அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு கருத்து!
- 'கொரோனா டூட்டிக்கு போன இளம் காவலர்'... 'சாலையில் திரும்பும்போது கண்முன்னே வந்த பயங்கரம்'... சென்னையில் நடந்த கோரம்!
- 'அந்த நாட்டில் இருந்து'... 'வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க'... ‘இந்தியாவின் ராஜதந்திரம்’... ‘ஆர்வம் காட்டும் மாநிலங்கள்’!
- VIDEO: 'அந்த காரணம் தான் அல்டிமேட்!'.. மதுபானம் வாங்க வந்த குடிமகன்களுக்கு... மலர் தூவி மரியாதை!.. டெல்லியில் பரபரப்பு!
- 'அதிரடி' நடவடிக்கைகளால்... '50 நாட்களுக்கு' பின் 'பூஜ்ஜியம்' ஆன எண்ணிக்கை... 'நிம்மதி' அடைந்துள்ள 'நாடு'...
- கடலூரில் மேலும் 68 பேருக்கு கொரோனா! மொத்த எண்ணிக்கை 228 ஆக உயர்வு! கோயம்பேடு சந்தையில் இருந்து போனவர்களால்தான் அதிகமான நோய்த்தொற்று!
- 'உயிரிழந்தவர்கள்' பெரும்பாலானோருக்கு இருந்த 'குறைபாடு'... 'இதை' கொடுத்தால் 'வேகமாக' குணமடையலாம்... ஆய்வாளர்கள் 'புதிய' தகவல்...
- "தமிழகம் முழுவதும் மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் திறப்பு".. "சென்னையில் மட்டும் மாற்று முடிவு!"- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
- 'இதுதான் கொரோனாவிற்கு மருந்து...' 'உங்க முன்னாடியே குடிச்சு காட்டுறேன்...' இதுவரைக்கும் எங்க நாட்டுல யாருமே சாகல...!